சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சிக்கல் அதிகமாகிறது; சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகிறார்?

By Pothy RajFirst Published Feb 18, 2022, 12:48 PM IST
Highlights

தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ ரகசிய தகவல்களைப் பகிர்ந்த விவகாரம், முறைகேடுகள் குறித்து விரைவில் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ ரகசிய தகவல்களைப் பகிர்ந்த விவகாரம், முறைகேடுகள் குறித்து விரைவில் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016 வரை வரைபதவி வகித்தார். இவரின் பதவிக்காலத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். 

இவருக்கும் பங்குச்சந்தைக்கும் பெரிதாக தொடர்பு இல்லை, ஆனாலும், இவர் மாதம் ரூ.15 லட்சத்தில் நியமிக்கப்பட்டு ஆண்டுக்கு 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 

இந்நிலையில் சுப்பிரமணியன் நியமனத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி அவருக்கு ஏராளமான சலுகைகள், ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புான செபி விசாரணை நடத்தியதில்  சித்ரா ராமகிருஷ்ணா, கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் நடந்துள்ளார். அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தியுள்ளார்என்பது தெரியவந்தது. 

தேசியப் பங்குசந்தையின் ரகசிய ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மின்அஞ்சல் மூலம் அந்த சாமியாருக்கு அனுப்பிவைத்து அவரின் சொல்படி அனைத்து முடிவுகளையும் சித்ரா எடுத்துள்ளார்.  மேலும் பல்வேறுஅதிர்ச்சிக்குரிய தகவல்களும் வெளியாகின.

தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததை செபி கண்டுபிடிக்கப்பிடித்தது. இதையடுத்து, முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதி்த்தது

இந்நிலையில் பங்குச்சந்தையின் பல்வேறு தகவல்களையும் பட்டியலிடுவதற்கு முன்பை பல்வேறு நிறுவனங்களுக்கும் பகிர்ந்துஅதன் மூலம் பல்வேறு ஊழல்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதைத்தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே என்எஸ்இ தொடர்பான ரகசிய ஆவணங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பே சில நிறுவனங்களுக்கு தகவல்களை அளித்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஆதாயத்தை சித்ரா ராமகிருஷ்ணா பார்த்திருக்கலாம் என்று செபி குற்றம்சாட்டுகிறது. 
வரிஏய்ப்பு, மற்றும் முறைகேடான வழியில் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆதாரங்களைச் சேகரிக்க நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய என்எஸ்இ முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, என்எஸ்இ ரகசிய தகவ்களைப் பகிர்ந்தது ஆகியவை தீவிரமடைந்திருப்பதால், சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சித்ரா ராமகிருஷ்ணா கொண்டுவரப்படுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சித்ரா ராமகிருஷ்ணா விவாகரத்ததை சிபிஐ விசாரணைக்காக விரைவில் எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
 

click me!