எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ரூ.23,000 கோடி திட்டம்! 91,600 வேலைவாய்ப்புகள்!

Published : Apr 28, 2025, 03:40 PM IST
எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ரூ.23,000 கோடி திட்டம்! 91,600 வேலைவாய்ப்புகள்!

சுருக்கம்

அடுத்த ஆறு ஆண்டுகளில் மின்னணு உற்பத்தியில் உள்நாட்டு மதிப்பு கூட்டலை கணிசமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.23,000 கோடி மதிப்பிலான மின்னணு கூறுகள் உற்பத்தித் திட்டத்திற்கான (ECMS) விரிவான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. வலுவான உள்நாட்டு வடிவமைப்பு திறன்களைக் காண்பிக்கும் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கப்படும்.

₹23,000 கோடி மதிப்பிலான மின்னணு பாகங்கள் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் (ECMS) கீழ் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டம், உள்நாட்டு மின்னணு உற்பத்திக்கு வலுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறப்பான வடிவமைப்புத் திறன்களையும், 'சிக்ஸ் சிக்மா' தர நிர்ணயங்களையும் கொண்ட நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விண்ணப்பங்கள் மே 1 முதல் ஆன்லைன் போர்டல் மூலம் பெறப்படும்.

இந்த மாத தொடக்கத்தில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ECMS திட்டம், பெரிய அளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பது, வலுவான உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் இந்திய நிறுவனங்களை உலகளாவிய உற்பத்திச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் உலகளாவிய மின்னணு உற்பத்திப் பங்களிப்பை ஆறு ஆண்டுகளில் 3% லிருந்து 8% ஆக உயர்த்தக்கூடும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறினார்.

இத்திட்டம் ₹59,350 கோடி முதலீடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. 91,600 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ₹4,56,500 கோடி மதிப்புள்ள உற்பத்தியை எட்ட முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது, உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களின் வகையைப் பொறுத்து, வேலைவாய்ப்பு உருவாக்கம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டிஸ்ப்ளே, கேமரா முதல் மல்டிலேயர் PCBs, லித்தியம்-அயன் பேட்டரி போன்ற முக்கிய பாகங்கள் வரை ECMS திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும். ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும். ECMS திட்டத்தில் பாகங்களின் வகையைப் பொறுத்து வெவ்வேறு முதலீட்டு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்களுக்கு கூடுதல் மூலதனச் செலவு ஆதரவுடன் ரூ.50 கோடி முதல் ரூ.500 கோடி வரை வருவாய் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளை வழங்குப்படும்.

தங்களது நிறுவனம் இத்திட்டத்தின் கீழ் குறைந்தது நான்கு பாகங்களைத் தயாரிப்பதற்கு கணிசமான முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அதுல் லால் கூறியுள்ளார். மின்னணு சாதனங்களின் உற்பத்தியை வலுப்படுத்த உலகளாவிய கூட்டாண்மையும் அரசின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு தற்போது ஆண்டுக்கு ₹11 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள மின்னணு பொருட்களை உற்பத்தி செய்கிறது. 2026க்குள் $300 பில்லியனையும், 2030-31க்குள் $500 பில்லியனையும் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சர்வம் ஏஐ (Sarvam AI) நிறுவனம், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்க உள்ளது. இது இந்தியா ஏஐ (IndiaAI) இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமாகும்.

ICEA தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ, SEMI இந்தியா தலைவர் அசோக் சந்தக் போன்ற தொழில்துறை தலைவர்கள் இந்தியாவின் உற்பத்தி வலிமையை கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக ECMS திட்டம் இருக்கும் எனப் பாராட்டியுள்ளனர். மொபைல் துறையின் $62 பில்லியன் உற்பத்தி தளம் இத்திட்டத்தின் சாத்தியமான தாக்கத்தை காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!