
மத்திய அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு எம்.பி.யும் 10 மாணவர்களுக்கு பரிந்துரை செய்து சேர்க்கமுடியும் என்று திட்டத்தை இந்த கல்வியாண்டுடன் முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளது
பரிந்துரை
மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு எம்.பி.க்கும் 10 இடங்கள் ஒதுக்கப்படும். அந்த 10 இடங்களில் எம்.பி.க்கள் தங்கள் தொகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட யாருக்கேனும் அந்த இடங்களில் மாணவர்களைச் சேர்க்க பரிந்துரைக்க முடியும்.
ஒதுக்கீடு போதாது
இந்நிலையில் எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்கள் என்பது போதவில்லை உயர்த்த வேண்டும் அல்லது எம்.பி.க்களுக்கு பள்ளியில் ஒதுக்கீடு இடங்களே தர வேண்டாம் எனக் கோரி காங்கிரஸ்எம்.பி. மணிஷ் திவாரி நேற்று மக்களவையில் பிரச்சினையைக் கிளப்பினார்.
முடிவுக்கு கொண்டுவாருங்கள்
இதையடுத்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிம் கூறுகையில் “ அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அமர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசியுங்கள். இதில் பள்ளிகளில் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு தேவையா அல்லது இந்த கல்வியாண்டுடன் முடிவுக்கு கொண்டுவரலாமா என்பது குறித்து முடிவு எடுங்கள். பாகுபாட்டை உண்டாக்கும் ஒதுக்கீடு எதற்காக நமக்கு தேவையா. அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் முடிவுஎடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தயார்
அதற்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கையில் “ மக்களவையில் அனைத்து உறுப்பினர்களும் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு முறையை ரத்து செய்துவிடலாம் என்று முடிவு எடுத்தால், அதன்படி மத்திய அரசு செயல்படும். நாம் மக்களின் பிரதிநிதிகள். சிலருக்கான பிரதிநிதிகள் கிடையாதே. பள்ளிக்கூடங்களில் எம்.பி.க்களுக்கான மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு முதலில் 2 ஆக இருந்து பின்னர் 5ஆக உயர்த்தப்பட்டது. இப்போது 10ஆக உயர்ந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு கல்வியாண்டும் மத்திய அரசுப்பள்ளிகளில் ஒரு எம்.பிக்கு மாணவர் சேர்க்கைக்கு 10இடங்கள் ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்தார்
மாநில அரசுஉதவி
இதைக் கேட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா கூறுகையில் “ இதை கைவிடுவது மிகவும் கடினமான முடிவு” என்றார்
இதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ அனைத்து இந்தியப் பணியில் இருக்கும் அதிகாரிகள், அலுவலர்கள் அடிக்கடி இடமாற்றத்தைச் சந்தித்கும்போது, அங்கிருக்கும் மத்திய அரசுப்பள்ளிகளில் பயில்வார்கள். மத்திய அரசுப்பள்ளிகள் போதுமானதாகஇல்லை. அந்தந்த மாநில அரசுகள் உரியஇடம் அளி்க்க முன்வந்தால், பள்ளிக்கூடங்கள் அமைக்கலாம்” எனத் தெரிவித்தார்