ஜாலியன்வாலா பாக் படுகொலை 1919 : மார்ச் 26ல் நடக்கும் இணையவழி கருத்தரங்கு !

Published : Mar 22, 2022, 01:26 PM IST
ஜாலியன்வாலா பாக் படுகொலை 1919 : மார்ச் 26ல் நடக்கும் இணையவழி கருத்தரங்கு !

சுருக்கம்

ஜாலியன்வாலா பாக் படுகொலை அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 -இல் ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால் பீரங்கி, துப்பாக்கி சூட்டு நிகழ்த்தப்பட்டது. 

ஜாலியன்வாலா பாக் படுகொலை :

இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவை சுடப்பட்டன. பிரிட்டன் அரசின் கணக்குப்படி மொத்தம் 379 பேர் இந்த கோர துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். ஆனாலும் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு குறித்து பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 

1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. பிரிட்டன் ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட உந்துதலை எழுச்சியை ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. 

இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது. ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. 

கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் கடையடைப்பு நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர் மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.

இணையவழி கருத்தரங்கு :

இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 நூற்றாண்டு பற்றி ஆன்லைனில் கருத்தரங்கு ஒன்றினை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது. மார்ச் 26 அன்று இணைய வழியாக நடைபெற இருக்கிறது. இதில் அமர்ஜித் சிங், லார்ட் ஷேக் எம்.பி, ஷேடோ நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் பாட் மெக்ஃபேடன், நவிந்த் மிஸ்ரா எம்.பி, விஜய் பிரசாத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், டேவிட் வார்டு, கெவின் கோர்ட்னி போன்றோர் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

PAN Card Rules: ஏப்ரல் 1 முதல் பான் கார்டுக்கு புது ரூல்ஸ்! இனி ஆதார் மட்டும் போதாது!
Ind Vs Pak Nuclear War: இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அணு ஆயுதப் போர்? வெளியான பரபரப்பு ரிபோர்ட்