திருப்பதியில் வசூலான ரூ.1000 கோடியை தெலங்கானாவுக்கு வழங்க வேண்டும் : அர்ச்சகர் தொடர்ந்த வழக்கு

 
Published : Oct 20, 2016, 03:07 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
திருப்பதியில் வசூலான ரூ.1000 கோடியை தெலங்கானாவுக்கு வழங்க வேண்டும் : அர்ச்சகர் தொடர்ந்த வழக்கு

சுருக்கம்

திருமலை - திருப்பதி தேவஸ்தானம், ரூ.1000 கோடியை தெலங்கான மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. துறை வாரியாக இரு மாநிலங்களுக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இந்து அறநிலையத் துறை சார்பில் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து ஆண்டுதோறும் ரூ.56 லட்சம் தெலுங்கானாவுக்கு வழங்கப்ப வேண்டும். ஆனால், இந்த தொகையை ஆயிரம் கோடியாக வழங்கக்கோரி, அர்ச்சகர் சவுந்தர்ராஜன் என்பவர் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் 1987 முதல் 2014 வரை கணக்கிட்டு தெலங்கானாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.1,000 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அர்ச்சகர் சவுந்தராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஐதராபாத் உயர்நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆந்திரா, தெலங்கானா அரசுகள் மற்றம் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்கும் உத்தரவிட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!