இனி 3 நாட்களில் புதிய மின் இணைப்பு கிடைக்கும்... மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

By Ramya s  |  First Published Feb 24, 2024, 9:40 AM IST

மின் இணைப்பு தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றி உள்ளது. அதன்படி இனி  பெரிய நகரங்களில் 7 நாட்களுக்கு பதிலாக 3 நாட்களில் மின் இணைப்பு கிடைக்கும்.


இனி நாட்டில் புதிய மின் இணைப்புகளை நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. ஆம்.. மின் இணைப்பு தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றி உள்ளது. அதன்படி இனி  பெரிய நகரங்களில் 7 நாட்களுக்கு பதிலாக 3 நாட்களில் மின் இணைப்பு கிடைக்கும். புதிய மின் மீட்டர்களுக்கு கிராமங்கள் 30 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. 15 நாட்களில் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

அதே போல் வீட்டின் மேற்கூரையில் சோலார் யூனிட்களை நிறுவுவதற்கும் விதிகளை அரசு தளர்த்தியுள்ளது. மத்திய மின் அமைச்சகம் இதுதொடர்பாக நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், மின்சாரம் (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 ஐ திருத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இவருக்கு இந்த நிலைமையா.. சிஇஓ ரவீந்திரனை நீக்க பைஜூவின் முதலீட்டாளர்கள் வாக்களிப்பு.!

மெட்ரோ நகரங்களில் 3 நாட்களிலும், கிராமங்களில் 15 நாட்களிலும் மின் இணைப்பு கிடைக்கும்

மேலும் அந்த அறிக்கையில், மெட்ரோ நகரங்களில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான காலம் 7 நாட்களில் இருந்து 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற நகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு பதிலாக 7 நாட்களிலும், கிராமங்களில் 30 நாட்களுக்கு பதிலாக 15 நாட்களிலும் புதிய மின் இணைப்பு கிடைக்கும். ஆனால், மலைப்பாங்கான கிராமப்புறங்களில், புதிய இணைப்புகள் எடுப்பதற்கும் அல்லது ஏற்கனவே உள்ள இணைப்புகளில் திருத்தம் செய்வதற்கும் முன்பு போலவே 30 நாட்கள் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மீட்டர் எப்போது பொருத்தப்படும்?

மேலும் மத்திய மின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உண்மையான மின் நுகர்வுக்கு ஏற்ப மீட்டர் ரீடிங் இல்லை என்ற புகார் எழுந்தால், விநியோக உரிமதாரர் புகார் பெறப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கூடுதல் மீட்டரை நிறுவ வேண்டும். இந்த கூடுதல் மீட்டர் அளவீடுகளைச் சரிபார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும். மின் நுகர்வு சரிபார்ப்புக்காக நிறுவனங்கள் நிறுவிய மீட்டர்களை ஆய்வு செய்யவும் புதிய விதிகள் வழிவகுக்கின்றன. நுகர்வோர் நலனே அரசுக்கு முக்கியம் என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களையும் சார்ஜ் செய்யலாம்

புதிய விதிகளின் கீழ், நுகர்வோர் இப்போது தங்கள் மின்சார வாகனங்களை (EV கள்) சார்ஜ் செய்ய தனி மின் இணைப்பை எடுக்கலாம். இது 2070 ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயுவைக் குறைத்து நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் நாட்டின் இலக்கை அடைய நோக்கமாக கொண்டுள்ளது. கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், பல அடுக்குக் கட்டிடங்கள், குடியிருப்புக் காலனிகள் போன்றவற்றில் வசிப்பவர்கள் இப்போது அனைவருக்கும் தனிப்பட்ட இணைப்பைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை பெறலாம்.

பிரதமர் மோடிக்கு எதிராக செயல்பட்ட கூகுள் ஜெமினி AI.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!

விதிகளை எளிதாக்கிய அரசு

இந்த திருத்தத்திற்குப் பிறகு, மேற்கூரையில் சூரிய சக்தி அலகு நிறுவும் செயல்முறையும் எளிதாகிவிடும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பல மாடி கட்டிடங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு வகையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இது தவிர குடியிருப்பு சமுதாயம், பொதுவான பகுதி மற்றும் பேக்-அப் ஜெனரேட்டர் ஆகியவற்றுக்கு தனி கட்டண முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.

இந்த திருத்தமானது மேற்கூரை சூரிய மண்டலத்தை நிறுவுவதை மிகவும் எளிமையாகவும் வேகமாகவும் செய்துள்ளது. 10 கிலோவாட் வரையிலான சோலார் சிஸ்டங்களுக்கு தொழில்நுட்ப ஆராய்ச்சி தேவையில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிக திறன் கொண்ட சூரிய மண்டலங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கான காலக்கெடு 20 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு முடிக்கப்படாவிட்டால், அது அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!