மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஆளுநர்களிடமே உள்ளது: உச்ச நீதிமன்றம் கருத்து!!

By Dhanalakshmi G  |  First Published Nov 6, 2023, 12:46 PM IST

சட்டப்பேரவையில் நிதி தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பு ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஆளுநர்களிடமே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


பஞ்சாப் அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் செய்ததாகக் கூறப்படும் மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின், அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பான செயல், ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் முடக்குவதாக தெரிவித்து இருந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

Tap to resize

Latest Videos

அப்போது, ''ஆளுநர்கள் கொஞ்சம் முனைப்புடன் செயல்பட வேண்டும், அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயல்பட வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஆளுநர்களிடமே உள்ளது'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்வுக்கு சென்ற மாணவிகளின் தாலியை கழற்ற சொன்ன அதிகாரிகள்!

இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''மாநில ஆளுநர் தன் முன் வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட நிலை அறிக்கை சில நாட்களில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தார். மீண்டும் இந்த மனு மீதான விசாரணை வரும்  வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. ஆளுநர் எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கட்டும் என்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், பஞ்சாப் ஆளுநருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை சென்றடைந்துள்ளது.

"வேலையில் ஸ்ட்ரிக்ட்.. அவர் ஒரு இரும்பு பெண்மணி".. பெங்களூரு அரசு அதிகாரி கொடூர கொலை - சக ஊழியர் சொன்ன தகவல்!

நவம்பர் ஒன்றாம் தேதி மாநில அரசு அனுப்பி இருந்த மூன்று மசோதாக்களில் இரண்டுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் முன்பு, அனைத்து முன்மொழியப்பட்ட சட்டங்களையும் தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்வேன் என்று பன்வாரிலால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதி தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பு ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும். 

பஞ்சாப் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் இந்திய முத்திரை (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2023 ஆகியவற்றுக்கு பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும், அக்டோபர் 19 ஆம் தேதி முதல்வருக்கு அவர் எழுதிய கடிதத்தில், மூன்று நிதி மசோதாக்களுக்கு ஆளுநர் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்துஇருப்பதாக தெரிவித்துள்ளார்.  

click me!