ரோஜ்கர் மேளா மூலம் 70 ஆயிரம் பேருக்கு அரசு வேலை - இளைஞர்களை வாழ்த்திய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

By Raghupati R  |  First Published Jul 22, 2023, 1:55 PM IST

மத்திய அரசின் ரோஜ்கர் மேளா மூலம் 70 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.


இன்று (ஜூலை 22) நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்பு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ரோஜ்கர் மேளாவின் போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இதில் வருவாய் துறை, நிதித்துறை, தபால் துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரம், பொதுப்பணி என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பணிகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு பணியாணைகள் வழங்கப்பட்டன.அப்போது பேசிய பிரதமர் மோடி, “நாடு வளர்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, அரசு ஊழியராக இணைந்து பணியாற்றுவது பெருமை அளிக்கக்கூடிய விஷயம்.

Tap to resize

Latest Videos

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பிரம்மாண்டமானதாக இருக்கும். உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும். இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது: என்று இளைஞர்களுக்கும் அறிவுரையை வழங்கினார் பிரதமர் மோடி.

சென்னையில் நடைபெற்ற ரோஜ்கர் மேளாவில் கலந்துகொண்டார் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று அரசு வேலைகள் பற்றிய பார்வையில் டெக்டோனிக் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இனி அதிகாரம் மற்றும் சுரண்டல் அல்ல. ஆனால் மக்களுக்கு சேவை. இன்று நாம் நமது வளர்ச்சி இலக்குகளை அடைய ஒரு பணி முறையில் செயல்பட்டு வருகிறோம்.

The culture of under PM ji is all about , and

There has been a tectonic shift in the perception of Govt jobs today. It is no longer about power and exploitation but service to the people. We are today working in a mission… pic.twitter.com/5a2bFD4ito

— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI)

இன்று அரசாங்கத்தில் இணைந்துள்ள 70,000 புதிய உறுப்பினர்களும், பிரதமரின் பார்வையுடன் இணைந்து, வளர்ந்த இந்தியா, புதிய இந்தியா என்ற ஒருங்கிணைந்த பொது இலக்கை நீங்கள் முன்னெடுத்துச் செல்லும்போது, தேசத்திற்கான உங்கள் சேவையில் மிகச் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !

இந்தியா கூட்டணி என்றால் என்ன.? பதில் தெரியாமல் முழித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் - வைரல் வீடியோ

click me!