2021-ம் ஆண்டு இன்றுடன் முடிய உள்ள நிலையில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ணமையமான டூடுல் ஒன்றை உருவாக்கி உள்ளது கூகுள் நிறுவனம்.
2020-ம் ஆண்டைப்போல் பல்வேறு சோதனைகளை கொடுத்த 2021-ம் ஆண்டு, இன்னும் சில மணிநேரங்களில் முடியப்போகிறது. புத்தாண்டு பிறக்கப்போகிறது என்கிற உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும், 2022-ம் ஆண்டு என்னென்ன சோதனையெல்லாம் காத்திருக்கோ என எண்ணவும் தோன்றுகிறது. ஏனெனில் தற்போது ஓமிக்ரான் என்கிற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் புதிய வருடம் பிறக்கப்போகிறது.
undefined
வழக்கமாக எந்த ஒரு பண்டிகையானாலும் கூகுள் நிறுவனம் டூடுல் விடுவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ணமையமான டூடுல் ஒன்றை உருவாக்கி உள்ளது கூகுள் நிறுவனம். இந்த டூடுல் அழகான அனிமேஷன் கிராஃபிக்ஸ் உடன் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி புத்தாண்டு ஸ்பெஷல் டூடுலின் மேல் கிளிக் செய்தால் "New Year's Eve" என்ற மெசேஜுடன் கூடிய புதிய பக்கம் ஒன்று ஓப்பனாகி கலர் கலராக பார்ட்டி பேப்பர்கள் கொட்டும் வகையில் அனிமேஷன் கிராஃபிக்ஸ் காட்சியளிக்கிறது. பயனர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்.