5 % ஜி.எஸ்.டி கட்டுங்க.. சோமேட்டோ, ஸ்விக்கிக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. உஷார் மக்களே !

Published : Dec 31, 2021, 01:32 PM IST
5 % ஜி.எஸ்.டி கட்டுங்க.. சோமேட்டோ, ஸ்விக்கிக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. உஷார் மக்களே !

சுருக்கம்

மத்திய அரசு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்பு உணவகங்களுக்கு இணையாக ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ-வை நடந்த வேண்டும் என முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பை ஏற்று உணவு டெலிவரி நிறுவனங்கள் தற்போது விதிக்கப்பட்டு உள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை இதுநாள் வரையில் இத்தளத்தில் இருக்கும் உணவகங்களில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.

உணவு விநியோக சேவைகளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு 5% ஜிஎஸ்டியை (GST) அரசாங்கம் விதித்துள்ளது. 

இதுவரை உணவகங்கள் இந்த வரியை செலுத்தி வந்த நிலையில், புதிய விதி அமலுக்கு வருவதால் உணவு விநியோக நிறுவனங்கள் (சோமேட்டோ,ஸ்விக்கி..) இந்த வரியை செலுத்தும்.  இந்த புதிய விதி 2022 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.ஜிஎஸ்டியின் புதிய விதிகளுக்குப் பிறகு, உணவு வினியோகத்திற்கான செயலிகள் தாங்கள் சேவை செய்யும் உணவகங்களிலிருந்து வரி வசூலித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் பொறுப்பை பெறுகின்றன. 

முன்பு உணவகங்கள் ஜிஎஸ்டியை வசூலித்து வந்தாலும் அதை அரசிடம் செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்பனேடட் பழ பானங்கள் விலை அதிகரித்துள்ளது. இது 28% ஜிஎஸ்டி மற்றும் அதற்கு மேல் 12% இழப்பீடு செஸ் விதிக்கப்படும். இதற்கு முன்பு 28% மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இது தவிர, ஐஸ்கிரீம் விலைகளும் அதிகரிக்கும். இதற்கு 18% வரி விதிக்கப்படும். மீட்டா பான் விலைகள் அதிகரிக்கும் இதற்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலைய்ல்,  அது இப்போது 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!