
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 1ம்தேதி முதல் பக்தர்கள் மீண்டும் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்று தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பக்தர்கள் முன்பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதன பாதபத்ம ஆராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்காக தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மார்ச் 20ம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க;- இந்த நாட்களில் சிபாரிசு கடிதங்களுடன் வந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி.!
இந்நிலையில், திருமலையில் சிஆர்ஓ அலுவலகத்தில் ஆர்ஜித் சேவை டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும். இதற்காக ஒருநாள் முன்னதாக காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் பதிவு செய்தால் மின்னணு சூலுக்கல் முறையில் பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். இதேபோல், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஏசி1ல் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படும். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கப்பிரதட்சணம் செய்வசதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
அங்கப்பிரதட்சணம்
கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2020 மார்ச் 20ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்க பிரதட்சணம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்டபோது 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட உள்ளனர். ஒருநாள் முன்னதாக ஒருநாள் முன் னதாக டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு மறுநாள் அதிகாலை ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.