திருவிழாக்களில் கடை போட 'முஸ்லிம்களுக்கு' தடை..கர்நாடகாவில் புது 'சர்ச்சை' !

Published : Mar 23, 2022, 01:22 PM IST
திருவிழாக்களில் கடை போட 'முஸ்லிம்களுக்கு' தடை..கர்நாடகாவில் புது 'சர்ச்சை' !

சுருக்கம்

கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முஸ்லீம்கள் கடை நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஹிஜாப் விவகாரம் :

ஹிஜாப் தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் காஜி செய்புன்னேசா மொகியுதீன் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஹிஜாப் அணிவது இஸ்லாம்மின் இன்றியமையாத அங்கம் அல்ல என்பதையும் குறிப்பிட்டது.

கர்நாடகாவில் தடை :

கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களாக அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று இருந்ததால், திருவிழாக்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் வழக்கம் போல திருவிழாக்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோவிலில் ஏப்ரல் 20ல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். இந்நிலையில் கடை அமைப்பதற்கான ஏலம் மார்ச் 31ல் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உடுப்பி மாவட்டம் காபுவில் உள்ள ஒசமாரிகுடி கோவிலிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு காரணம் ஹிஜாப் சர்ச்சை காரணம் என்று பரவலாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய முஸ்லீம்கள், இதுவரை இந்துக்கள் முஸ்லீம்கள் சகோதரர்களாக பழகி வருகிறோம். ஆனால் தற்போதைய பிரச்னையை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்படுவது தவறானது என்கின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!