தங்க மையால் எழுதப்பட்ட அரிதான 16ம் நூற்றாண்டு புனித குர்ஆன் நூல்! ISC மாநாட்டில் வெளிவராத புதிய தகவல்கள்

By Pothy Raj  |  First Published Jan 4, 2023, 2:05 PM IST

தங்க மையால் எழுதப்பட்ட 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகின் மிக அரிதான புனித குர்ஆன் நூல், மகாராஷ்டிராவில் நடக்கும் 108வது இந்திய அறிவியல் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


தங்க மையால் எழுதப்பட்ட 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகின் மிக அரிதான புனித குர்ஆன் நூல், மகாராஷ்டிராவில் நடக்கும் 108வது இந்திய அறிவியல் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புடைய, நாக்பூரைச் சேர்ந்த ரிசர்ச் பார் ரிசர்ஜன்ஸ் பவுண்டேஷன்(ஆர்எப்ஆர்எப்) அமைப்பு இந்த தங்கத்தால் எழுதப்பட்ட புனித குர்ஆன் நூலை காட்சிக்கு வைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

உலகிலேயே இதுபோன்று தங்க மையால் எழுதப்பட்ட புனித குர்ஆன் நூல்கள் 4 மட்டுமே உள்ளன. அதில் ஒன்று இந்தியாவில்உள்ளது. இந்த புனிதகுர்ஆன் நூலோடு சேர்த்து பழங்கால கையெழுத்துப் பிரதிகளையும் காட்சிக்கு வைத்துள்ளது. இவைஅனைத்தும்நூற்றாண்டுகள் ப ழமையானவையாகும். 

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியன்று ஒரே நாளில் குவிந்த காணிக்கையால் புதிய சாதனை!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாரதிய சிக்சான் மண்டலின் ஆராய்ச்சி மையம்தான் ஆர்எப்ஆர்எப் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எப்ஆர்எப் அறிவுசார் மையத்தின் இயக்குநர் புஜாங் போப்டே கூறுகையில் “ 16-ம் நூற்றாண்டில் தங்க மையால் எழுத்தப்பட்ட புனிதகுர்ஆன் நூல். உலகிலேயே 4 பிரதிகள்தான் உள்ளன அதில் ஒன்று இந்தியாவிடம் இருக்கிறது.

 

https://t.co/xZIK2h1u5U - Rare Gold ink Quran, Shivaji’s letter on display at Indian Science Congress in Nagpur - pic.twitter.com/iQh4ObtvwK

— Nagpur Today (@nagpurtoday1)

பெர்சியாவில் நாஷ்டாலிக் மற்றும் குபி ஆகிய கையெழுத்துப்பிரதிகள் உள்ளன. இதில் நாஸ்டாலிக் உலகிலேயே சிறந்த கையெழுத்தாகும். இந்த நாஸ்டாலிக்கில்தான் புனிதகுர்ஆன் எழுதப்பட்டுள்ளது.

தங்க மையால் எழுதப்பட்ட புனிதகுர்ஆன் நூலில் 385 பக்கங்கள் உள்ளன, எந்தவிதமான தவறும் இல்லாமல், அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதுதான்இதன் சிறப்பம்சமாகும். 385பக்கங்களிலும் தங்க மையால் சிறிய எழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளன.

இந்த தங்க மையால் எழுதப்பட்ட புனித குர்ஆன் நூலை ஹைதராபாத் நிஜாமின் திவான் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.எங்களின் அமைப்பில் பழமையான இந்தியாவின் வரலாறு, அறிவியல், மதங்கள் குறித்த 15ஆயிரம் கையெழுத்துப்பிரதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பட்ஜெட்டில் உரம், உணவு மானியத்தை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டம்

1577ம் ஆண்டு அபு பைசல் என்பவரால் அக்பர்நாமா எழுதப்பட்டது என்பதை உலகம் அறியும். அந்த நூல் பெர்சிய மொழியில் திபி இ அக்பர் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது அதுவும் நம்மிடம் இருக்கிறது. இந்த நூல் 17ம் நூற்றாண்டு எழுதப்பட்டது.

தாஜ்மஹாலை விளக்கும், அது எவ்வாறு கட்டப்பட்டது, எத்தனை ஆண்டுகள் கட்டப்பட்டன உள்ளிட்ட அனைத்துவரலாற்றையும் விளக்கம் “தாரிக் இ தாஜ்” நூலம் நம்மிடம் இருக்கிறது.

தாஜ்மஹால் குறித்து உலகத்துக்கு தெரியும். அதன் வரலாறு தெரியாது, எப்போது மும்தாஜ் இறந்தார், எப்போது தாஜ்மஹால் கட்டுமானம் தொடங்கியது என யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த தாரிக் இ தாஜ் நூலில் 1631ம் ஆண்டு ஜூன் 31ம் தேதி புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு மும்தாஜ் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, எத்தனைபேர் கட்டுவித்தார்கள், பொருட்களை எங்கு வாங்கினார்கள் என்ற விவரங்கள் உள்ளன.சத்ரபதி சிவாஜி குறித்து ராமச்சந்திர தீக்சித் எழுதிய நூல், கடைசியாக சிவாஜி மகாராஜ் 17ம் நூற்றாண்டில் எழுதிய கடைசிக் கடிதமும்பாதுகாக்கப்பட்டுள்ளது.

பனைஓலைகளில் எழுதப்பட்ட விஷ்ணு புராணம், கருட புராணங்களும்உள்ளன. இவை அனைத்தும் ஆயிரக்கணக்காண ஆண்டுகள் பழமையானவை. 1.50 லட்சம் பழமையான கையெழுத்துப் பிரிதிகளை 5 கோடி பக்கங்களாக டிஜிட்டல் மயமாக்க வேண்டியுள்ளது

ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் நிரந்தர இடம்?

3441 காப்பகங்கள், அருங்காட்சியகங்களில் இருந்து 25 லட்சம் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்துள்ளோம். இவற்றை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். இதற்காக கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். 
இவ்வாறு போப்படே தெரிவித்தார்

click me!