
ஆந்திராவில் போக்குவரத்து கழக அதிகாரி பூர்ணசந்திரராவ் வீட்டில் லஞ்ச துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் 60 கிலோ வெள்ளிப் பொருக்ள், 1 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டன. பூர்ணசந்திரராவின் மற்ற வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
ஆந்திராவில், மோட்டார் வாகன ஆய்வாளராக பூர்ணசந்திரராவ் இருந்து வருகிறார். இவர் தற்போது சாலை
போக்குவரத்து கழக அதிகாரியாக உள்ளார். கடந்த 34 ஆண்டுகால அரசு பணியில் அவர் சுமார் 14 வீடுகளுக்கு
சொந்தக்காரராக உள்ளார்.
இந்த நிலையில், பூர்ணசந்திரராவ் மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், பூர்ணசந்திரராவ் வீடுகளில் சோதனையிட முடிவு செய்தனர்.
இதனை அடுத்து பூர்ணசந்திரராவின் ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் வெள்ளி சாமான்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த வெள்ளி பொருட்கள் 60 கிலோ எடை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கிலோ தங்கம், ரூ.20 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனை ஆரம்பமே என்றும், இன்னும் பல வீடுகளில் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார். இதன் மூலம் மேலும் ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.