நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் புதிய திருப்பம்..!

Asianet News Tamil  
Published : Oct 09, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் புதிய திருப்பம்..!

சுருக்கம்

godhra train burnt case

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 2-ம் தேதி அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி விரைவு ரயிலுக்கு கோத்ரா ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இதில் ரயிலின் எஸ் 6 பெட்டி  எரிந்து, அதிலிருந்த 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது.குற்றவாளிகளில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 

போதிய சாட்சிகள் இல்லை என்று கூறி  குற்றம் சாட்டப்பட்டிருந்த 63 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் சார்பிலும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பான பிரதி வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்