smriti iraniகோவா-வில் சட்டவிரோத பார் நடத்தும் ஸ்மிருதி இரானியின் மகள்: பதவி நீக்குங்கள் : காங். குற்றச்சாட்டு

By Pothy Raj  |  First Published Jul 23, 2022, 4:41 PM IST

கோவாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மகள் சட்டவிரோதமாக பார் நடத்துகிறார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


கோவாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மகள் சட்டவிரோதமாக பார் நடத்துகிறார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவா மாநிலம், அசேகேவா பகுதியில் ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினர் சார்பில், சில்லி சோல்ஸ் என்ற ஹோட்டல் மற்றும் பார் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஹோட்டலை ஸ்மிருதி இரானியின் மகள் நிர்வகித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

ஊடகங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கின்றன; தலைமைநீதிபதி என்.வி.ரமணா குற்றச்சாட்டு

இந்த உணவத்துக்கு இறந்தவரின் பெயரில் உரிமம் எடுக்கப்பட்டு நடத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா எழுப்பிய குற்றச்சாட்டில், “ கோவாவில் புதிதாக ஹோட்டல்களுக்கு பார்களுக்கு உரிமம் வழங்கப்படுவது இல்லை.ஏற்கெனவே உள்ளஹோட்டல்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும். அந்தவகையில் ஸ்மிருதி இரானி குடும்பத்தினர் நடத்தும் ஹோட்டலுக்கு பார் உரிமம் இல்லை.

உணவகத்தின் உரிமம் அந்தோனி டிகாமா என்பவர் பெயரில் இருக்கிறது. இந்த அந்தோனி டிகாமா கடந்த 2021ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். ஆனால், பார் உரிமம் கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறு இறந்தவர் பெயரில் உரிமம் புதுப்பிக்க முடியும். அப்படியானால்இந்த ஹோட்டலுக்கு இரு பார் உரிமம் இருக்கிறதா. இது போலியான உரிமம். ஆதலால், ஸ்மிருதி இரானியை உடனடியாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும்.

நிரவ் மோடியின் ரூ.253 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

நாளேடுகள்  நடத்துவது போன்ற புனிதமான செயலுக்கு, கோவாவில் சட்டவிரோதமாக பார் நடத்துவததற்கும் இடையே ஒப்பீடும் இருக்க முடியாது. ஸ்மிருதி இரானிக்குத் தெரியாமல் இது நடந்ததா, அல்லது அவரின்செல்வாக்கு இல்லாமல் உரிமம் வழங்கப்பட்டதா. ” எனத் தெரிவித்தார்.

ஆனால், ஸ்மிருதி இரானி மகள் தரப்பு வழக்கறிஞர் கிரத் நக்ரா கூறுகையில் “ என்னுடைய மனுதாரர் ஹோட்டல் நடத்தவும் இல்லை, அதற்கு உரிமையாளரும் இல்லை. எந்தவிதமான நோட்டீஸும் கோவா அரசிடம் இருந்தோ, அதிகாரிகளிடம்  இருந்தோ வரவில்லை. 

என்னுடைய மனுதாரரின் தாயார் புகழ்பெற்ற அரசியல்தலைவர் ஸ்மிருதி இரானி, அவர் மீதான அரசியல் காழ்புணர்ச்சிளைத் தீர்க்கும் வகையில் சமூக ஊடகங்களில் இதுபோல், அற்பமான, தவறான, தீங்கிழைக்கும், அவதூறான கருத்துக்கள் பரப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி, சிறப்பு குழந்தைகள் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பது கூடாது: டிஜிசிஏ உத்தரவு

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவது வேதனையானது, துரதிர்ஷ்டம்” எனத் தெரிவித்தார்
 

click me!