மோடியின் கூட்டத்தில் தகராறு செய்த பெண் - பெண்கள் தின விழாவில் பரபரப்பு

First Published Mar 10, 2017, 10:46 AM IST
Highlights
International Womens Day was celebrated around the world yesterday.The various organizations presented the conducted competitions for women


உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அமைப்பினர், பெண்களுக்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். அதேபோல், மகளிர் குழுக்களின் பெண் 

தலைவர்களை தேர்ந்தெடுத்து சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாக பணியாற்றிய பெண் பிரதிநிதிகளுக்கும், அமைப்புகளின் தலைவர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இந்நிலையில், 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம், காந்தி நகரில் பெண் பஞ்சாயத்து தலைவர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

பிரதமர், மேடையில் பேசி கொண்டிருந்தபோது, அப்போது ஷாலினி சிங் என்னும் இளம்பெண், ’மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை  மாநில அரசு முறையாக வழங்குவதில்லை’, என்று மேடை அருகே சென்று கூச்சலிட்டார். இதை பார்த்ததும், அங்கிருந்த 

உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த இளம்பெண்ணை, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

click me!