மருத்துவமனை சிகிச்சை மறுப்பு.. ரிக்‌ஷாவில் குழந்தை பெற்ற பெண் - உ.பி.யில் தொடரும் அவலம்

Asianet News Tamil  
Published : Aug 17, 2017, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
மருத்துவமனை சிகிச்சை மறுப்பு.. ரிக்‌ஷாவில் குழந்தை பெற்ற பெண் - உ.பி.யில் தொடரும் அவலம்

சுருக்கம்

girl gave a child birth in rickshaw in uttar pradesh

உத்தரப்பிரதேச மாநிலம், சஹரான்பூர் நகரில் கர்பிணிப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்து, நள்ளிரவில் வௌியேற்றியது. அதைத் தொடர்ந்து அந்த பெண் ரிக்‌ஷாவில் குழந்தை பெற்றெடுத்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து,சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை மீது அந்த பெண்ணின் கணவர் போலீசில்  புகார் அளித்துள்ளார்.

சஹரான்பூர் நகரைச் சேர்ந்தவர் முனாவர். நிறைமாத கர்ப்பிணியான இவரை அவரின் கணவர், கடந்த 14-ந்தேதி இரவு மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தார். ஆனால், அன்று நள்ளிரவு திடீரென மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்து முனாவரை வௌியேற்றியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முனாவரை அவரின் கணவர் ரிஷ்ஷா மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். ஆனால், ரிக் ஷாவில் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அதன்பின், முனாவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், முனாவரின் கணவர், தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, நள்ளிரவில் வௌியேற்றிய மருத்துவமனை மீது ஜனாபுரி போலீசில் புகார் அளித்தார். அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. வித்யா சாகர் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மாஸ் காட்டும் இந்தியன் ரயில்வே.. 180 கிமீ ஸ்பீடு..! நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி
மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!