
வயது முதிர்ந்ததால் கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களுக்கு வாழ்விடம் தந்து , பசுக்களை தனது குழந்தைகளைபோல் வளர்த்து வருகிறார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு அதிசிய மங்கை இரினா புரூனி்ங்.
59 வயதுள்ள அவர் ஜெர்மனி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கடந்த 1978-ம் ஆண்டு வந்தார்.
பசுவையே குருவாக்கினார்
இந்தியா வந்த அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் உள்ள ராதாகுண்டில் தங்கி தனக்கான குருவை தேடி வந்தார்.
இந்நிலையில் அவருக்கு கிடைத்தது வயது முதிர்ந்து கைவிடப்பட்ட பசு ஆகும். அந்த பசுவையே தனது குருவாக கருதி வளர்க்கத்தொடங்கினார் அவர்.
1,200 பசுக்கள்
பின்னர் படிப்படியாக பிறரால் கைவிடப்பட்ட பசுக்கள் அவரது பசுவளர்ப்பு சாலைக்கு வரத்தொடங்கின. தற்போது சுமார் 1200 பசுக்களை அவரது பசு பண்ணையில் வளர்த்து வருகிறார் அந்த வயதான ஜெர்மனி மங்கை.
இது குறித்து பேசிய அவர், வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களை தனது குழந்தைகள் போல வளர்த்துவருவதாக கூறுகிறார். நோய்வாய்ப்பட்ட பசுக்களை யார் கொண்டுவந்து கொடுத்தாலும் அதை தான் வாங்க மறுப்பதில்லை என்கிறார் அவர்.
60 தொழிலாளர்கள்
ஜெர்மனியில் தனக்கு வரும் வாடகை பணத்தில் இருந்து இந்த பசு பண்ணையை பாதுகாத்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்த பசுப் பண்ணையில் 60 தொழிலாளர்களையும் சம்பளத்திற்கு நியமித்து பசுக்களை பாதுகாக்கும் இந்த அரும்பெரும் சேவையை செய்துவருகிறார் ஜெர்மனி மங்கை இரினா புரூனிங்.
கோரிக்கை
தனக்கு நிரந்தர விசா வழங்க இந்திய அரசு உதவவேண்டும் என்கிறார் அவர். தற்போது வருடா வருடம் விசாவை புதுப்பிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.