ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் முதல்முறையாக டெல்லிக்கு 2 நாட்கள் பயணமாக இன்று வந்துள்ளார்.
ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் முதல்முறையாக டெல்லிக்கு 2 நாட்கள் பயணமாக இன்று வந்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்கள், கிளீன் எனர்ஜி, வர்த்தகம் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் முடிவாகும் எனத் தெரிகிறது
டெல்லி வந்த ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கோலஸ்க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஜெர்மன் அதிபர் ஸ்கோலஸை பிரதமர் மோடி வரவேறறார்.
ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - ஹவாலா புகாரால் அமலாக்கத்துறை அதிரடி
பிரதமர் மோடியை காலை 11.45 மணிக்கு ஜெர்மன் பிரதமர் ஸ்கோலஸ் சந்திக்க உள்ளார். உக்ரைன் ரஷ்யா பிரச்சினை தீவிரமடைந்துள்ளநிலையில், இந்திய-பசிபிக் மண்டலத்தில் இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்த சந்திப்பு நடத்தப்படுகிறது
ஜெர்மன் பிரதமராக ஸ்கோலஸ் 2021ம் ஆண்டு டிசம்பரில் பதவி ஏற்றபின், முதல்முறையாக இந்தியாவுக்கு இப்போதுதான் வந்துள்ளார்.
பிரதமர் மோடி, ஜெர்மன் பிரதமர் ஸ்கோலஸ் சந்திப்பு குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ ரஷ்யா உக்ரைன் போர் விளைவுகள் குறித்து இரு தலைவர்களின் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படும். வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத எரிசக்தி, காலநிலை மாற்றம், புதிய தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கலாம், கூட்டுறவை அதிகப்படுத்தலாம். கடந்த சில ஆண்டுகளில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலைமையை இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்
IPS அதிகாரி ரூபா-வுக்கு பெங்களூரு நீதிமன்றம் கட்டுப்பாடு| IAS அதிகாரி ரோஹினி-க்கு நிம்மதி
கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கடந்த ஆண்டு மே 2ம் தேதி பெர்லினில் நடந்த இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மன் சென்றிருந்தார். அப்போதுதான் ஸ்கோலஸை முதன்முறையாக மோடி சந்தித்தார்.
ஜெர்மன் அதிபர் ஸ்கோலஸ் நாளை காலை டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படுகிறார், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், மாலை இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு மீண்டும் புறப்பட்டுச் செல்லஉள்ளார்.