மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த விவசாயிக்கு வெறும் ரூ.2.49 காசு மட்டுமே லாபமாகக் கிடைத்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்து, நொந்து கொண்டார்.
மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த விவசாயிக்கு வெறும் ரூ.2.49 காசு மட்டுமே லாபமாகக் கிடைத்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்து, நொந்து கொண்டார்.
சோலாப்பூர் மாவட்டம், பார்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர சவான்(வயது63). இவர் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டிருந்தார். ஆனால், தற்போது வெங்காயத்துக்கு போதுமான அளவு விலையில்லை. இந்நிலையில் தனது நிலத்தில் பயிரிட்ட வெங்காயத்தை அறுவடை செய்து, சோலாப்பூர் சந்தைக்கு விற்பனைக்கு ராஜேந்திரா கொண்டு சென்றார்.
ஆனால், அங்கு சென்ற ராஜேந்திராவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே எடுப்போம் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். 512 கிலோ வெங்காயத்தை 10 சாக்குகளில் அடைத்து, போக்குவரத்து செலவு செய்து, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி கொடுத்து அனைத்து செலவுகளும் சேர்த்து ரூ.509 ஆனது. ஆனால், வெங்காயம் ரூ.512.க்கு விலைபோனது. விவசாயி ராஜேந்திராவுக்கு நிகர லாபமாக ரூ.2.49 மட்டுமே கிடைத்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - ஹவாலா புகாரால் அமலாக்கத்துறை அதிரடி
இது குறித்து ராஜேந்திரா சவான் கூறுகையில் “ என்னுடைய நிலத்தில் விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்து 512 கிலோவை 10 சாக்குகளில் சோலாப்பூர் சந்தைக்கு கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு சென்றேன். குவிண்டால் 100 ரூபாய்க்கு எடுப்பதாகத் தெரிவித்தனர். எனக்கு போக்குவரத்து செலவு, ஏற்று, இறக்குக் கூலி என மொத்தம் ரூ.509.51 பைசா செலவானது.
இறுதியாக 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்தமைக்கு எனக்கு ரூ.2.49 காசு நிகர லாபமாகக் கிடைத்தது. 512 கிலோ வெங்காயத்தை அறுவடை செய்த எனக்கு கிடைத்த லாபம் என்பது, எனக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கே அவமானம்.
இதுபோன்று லாபம் கிடைத்தால் எவ்வாறு விவசாயிகள் உயிர்வாழ முடியும். வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வெங்காயம் விளைச்சல் நன்றாக இருக்கிறது, ஆனால், மொத்தசந்தையில் விலை குறைவைாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்
மொத்த விற்பனையாளர் ஒருவர் கூறுகையில் “ ஒரு விவசாயி 10 மூட்டைகள் வெங்காயம் மட்டுமே கொண்டு வந்திருந்தார், விளைபொருட்களும் குறைந்த தரத்தில் இருந்தன. அதனால்தான் அவருக்கு குவிண்டால் விலை 100 ரூபாய்க்கு போனது. அனைத்து கழிவுகளுக்குப் பிறகு, அவருக்கு நிகர லாபமாக 2 ரூபாய் கிடைத்தது. விவசாயிகள் சமீப காலங்களில் 400க்கும் மேற்பட்ட மூடைகளை என்னிடம் விற்று நல்ல வருமானம் பெற்றுள்ளார் " என்றுதெரிவித்தார்.
IPS அதிகாரி ரூபா-வுக்கு பெங்களூரு நீதிமன்றம் கட்டுப்பாடு| IAS அதிகாரி ரோஹினி-க்கு நிம்மதி
வேளாண் சங்கத்தலைவர் ராஜூ சேத்தி கூறுகையி்ல் “ கரீப் விளைச்சல் அறுவடையாக வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளது. இதை நீண்டகாலத்துக்கு சேமிக்க முடியாது. என்பதால், இதன் காலம் மிகக்குறைவு. வெங்காயத்தை சந்தையில் உடனடியாக விற்க வேண்டும், ஏற்றுமதி செய்ய வேண்டும்.
வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்வதில்லை. கரீப் வெங்காயத்தையும் அரசு கொள்முதல் செய்து சந்தைக்கு கொண்டுவர வேண்டும்.வெங்காயம் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையும் அரசிடம் நிலையாக இல்லை. பாகிஸ்தான், வங்கதேசத்தில் நம்முடைய வெங்காயத்துக்கு நல்லகிராக்கி இருக்கிறது.
இரான் வெங்காயத்தைவிட இந்திய வெங்காயத்தை அதிகமாக மக்கள் வாங்குவார்கள். ஆனால், அரசின் ஏற்றுமதிக் கொள்கை நிலையற்றதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்