கர்நாடக பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடத் தடைவிதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடத் தடைவிதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுதிகல் ஐபிஎஸ். தடாலடியான அதிகாரியான ரூபா அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இடமாற்றத்துக்கு ஆளாவார். மாநில கைவினை மேம்பாட்டுக் கழக இயக்குநராக ரூபா இருந்தார்.
கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை இயக்குநராக இருந்தவர் ரோஹினி சிந்தூரி. இந்த இருபெண் அதிகாரிகளுக்கும் இடையே சிலஆண்டுகளாக லேசான உரசல் இருந்தாலும் அது பெரிதாக வெளியே தெரியவில்லை.
கொரோனா காலத்தில் 34 லட்சம் பேரை காப்பாற்றிய மோடி அரசு| ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பேஸ்புக்கில், ரோஹினியின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டது இருவரின் மோதலை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே ஐபிஎஸ் ரூபா, ஐஏஎஸ் ரோஹினி இருவரும் ஒருவர் மீதுஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனால், இரு பெண் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல் கர்நாடக அரசிலும் சலசலப்பை ஏற்படுத்தியதால், இருவருக்கும் பொறுப்பு ஏதும் வழங்காமல் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா, தனது பேஸ்புக்கில், “ ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, ஊடகத்தினர் இதில் கவனம் செலுத்தவேண்டும் எனத் தெரிவித்தார். ரோஹினி மீது 19 வகையானகுற்றச்சாட்டுகளை ரூபா வைத்துள்ளார்.
இதையடுத்து தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரூபா மீது பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் ஐஏஎஸ்அதிகாரி சிந்தூரி அவதூறு வழக்குத் தொடர்ந்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்கு ரூபா மன்னிப்புக் கோர வேண்டும் அல்லது, ரூ.ஒரு கோடி இழப்பாடாக வழங்கிட வேண்டும் என்று சிந்தூரி தெரிவித்திருந்தார்.
ராய்பூர் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு| சோனியா, ராகுல் செயற்குழுவில் பங்கேற்கவில்லை
இந்த வழக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி “ ஐபிஎஸ் ரூபாய், ஐஏஎஸ் ரோஹினி இருவரும் அரசாங்கத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கான சட்டவிதிகள் அவர்களை கட்டுப்படுத்துகிறது. துரதிர்ஷ்டமாக, இரு அதிகாரிகள் குறித்த நடத்தையும் நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி குறித்து எந்தவிதமான ஊடகங்களும் தவறான கட்டுரைகளை பிரசுரிக்கக்கூடாது. ஐபிஎஸ் அதிகாரி ரூபா-வும் இனிமேல், ரோஹினி சிந்தூரி குறித்து சமூகவலைத்தளத்தில் ஏதும் பதிவிடக்கூடாது.மார்ச் 7ம் தேதிக்குள் ரூபா பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது