பிரபல நகை குழுமமான ஜோய் ஆலுக்காஸ் நிறுனத்தின் 305 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை ஜோய் ஆலுக்காஸ் நிறுனம் மீறுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
பிரபல நகை கடையான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் ரூ.305.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து ஹவாலா மூலம் துபாய்க்கு பெரும் தொகையை மாற்றியதும், பின்னர் ஜோய் ஆலுக்காஸ் வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான 100 சதவீதம் துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் இந்த வழக்கு தொடர்பானது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தனது ரூ. 2,300 கோடி ஐபிஓவை திரும்பப் பெற்றது. அதன் நிதி முடிவுகளில் கணிசமான மாற்றங்களை இணைக்க கூடுதல் நேரம் தேவை என்று கூறியது. திருச்சூர் ஷோபா நகரில் உள்ள நிலம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் அடங்கிய ரூ. 81.54 கோடி மதிப்பிலான 33 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
91.22 லட்சம் மதிப்புள்ள மூன்று வங்கிக் கணக்குகள், ரூ.5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிரந்தர வைப்புத்தொகைகள் மற்றும் 217.81 கோடி மதிப்புள்ள ஜோய் ஆலுக்காஸ் பங்குகளும் அமலாக்க இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க..ஸ்மார்ட் வாட்ச் முதல் குத்து விளக்கு வரை.. வீடு தேடி வரும் பரிசுகள்! ஈரோடு கிழக்கு தொகுதி பரிசு பொருள் லிஸ்ட்!
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்