சபரிமலை எதிரொலி : இந்த 7 கோவிலுக்குள் ஆண்கள் செல்ல கூடாது...! தெரியுமா இந்த விவரம்..?

By thenmozhi gFirst Published Oct 17, 2018, 7:17 PM IST
Highlights

உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்தி சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஆண்கள் ஒரு சில கோவிலுக்குள் நுழைய கூடாத இடங்களும் இருக்கிறது என்பது இந்த தருணத்தில் வெளியாகியுள்ளது.

உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்தி சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஆண்கள் ஒரு சில கோவிலுக்குள் நுழைய கூடாத இடங்களும் இருக்கிறது என்பது இந்த தருணத்தில் வெளியாகியுள்ளது.

சக்குலத்துக்கவ், கேரளா

கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோவில், இங்கு நாரிபூஜை செய்யப்படுகிறது. அப்போது ஆண்கள் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.

கொட்டான்குளங்கரை தேவி ஆலயம் கேரளா:

இங்கு துர்காபகவதி அல்லது ஆதி சக்தி என்று அழைக்கப்படும் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்கள் வர மாட்டார்கள். அப்படியே வருகை புரிய வேண்டும் என்றால், வருடத்தில் நடைபெறும் விஷேஷ பூஜையின் போது ஆண்கள் பெண்கள் வேடமிட்டு வருவது சிறப்பு.

மாதா கோவில், பீகார்

இது பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய கோவில், ஆண் பூசாரிகள் கூட குறிப்பிட்ட சில நாட்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லையாம். 

கமக்கியா கோவில், ஆந்திரா:

கௌகாத்தியில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த காமக்கியா கோவிலை போலவே ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் ஒரு காமக்கியா கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஆண்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. காரணம் அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு அம்மனுக்கு ஏற்படும் மாதவிடாய் நாட்கள் என எண்ணி இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சாவித்திரி ஆலையம் ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் அமைத்துள்ள ரத்தினகிரி மலை அடிவாரத்தில் உள்ளது சாவித்திரி ஆலயம். இந்த கோவிலுக்குள்ளும் ஆண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. காரணம் சாவித்திரியின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், ஏற்பட்ட கோபத்தின் காரணமாக சாவித்திரி தேவி இந்த கோவிலில் தங்கி விட்டதாகவும், இதனால் இந்த கோவிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என காலம் காலமாக முன்னோர்கள் கூறி வருகிறார்கள்.

பகவதிமா ஆலயம், கேரளா:

கேரளா மற்றும் கன்னியாகுமாரி எல்லையில் அமைந்துள்ள இந்த கோவிலில், உள்ள பகவதி அம்மன் சிவனை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என கடலின் மையப்பகுதிக்கு சென்று பிராத்தனை செய்யப்போனாராம். இதன் காரணமாக இந்த கோவிலுக்குள் திருமணம் ஆன ஆண்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை. திருமணம் ஆகாதவர்கள் வெளியில் இருந்து அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆட்டுக்கால் ஆலயம்,கேரளா:

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில், இங்கு கண்ணியகா தேவி அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில், குறிப்பாக திருவிழா நடைப்பெறும் நாட்களில் ஆண்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை.

click me!