மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 4 ரூபாய் 50 காசுகள் உயர்வு… ஒரே ஆண்டில் 76 ரூபாய் அதிகரிப்பு !!!

First Published Nov 2, 2017, 6:19 AM IST
Highlights
gas cylinder price hike


மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையை 4 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 76 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 4.50 ஆக உயர்ந்து ரூ.495.65 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் 76 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 742 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.93 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் 18.11 கோடி பேர் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2,66 கோடி பேர் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

click me!