அரசின் சேவைகளைப் பெற அதிகாரிகளுக்கு 50 சதவீத மக்கள் லஞ்சம் கொடுத்தனர்....‘கள ஆய்வில்’ அதிர்ச்சி ரிப்போர்ட்

 
Published : Nov 02, 2017, 05:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
அரசின் சேவைகளைப் பெற அதிகாரிகளுக்கு 50 சதவீத மக்கள் லஞ்சம் கொடுத்தனர்....‘கள ஆய்வில்’ அதிர்ச்சி ரிப்போர்ட்

சுருக்கம்

bribe in india

அரசின் அத்தியாவசிய சேவைகளைப் பெற கடந்த ஆண்டு அரசு அதிகாரிகளுக்கு  10 பேரில் 5 பேர் லஞ்சம் கொடுத்துதான் பெற்றுள்ளனர் என்று தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 8 பேர் போலீஸ், உள்ளாட்சிகள், உள்ளூர் நிர்வாகத்துக்கு, சொத்துக்கள் பதிவு, வாட் வரி தொடர்பாக லஞ்சம் கொடுத்துள்ளனர்

‘லோக்கல் சர்க்கிலஸ்’ என்ற இணையதளம், ஆன்-லைன் மூலம் ‘இந்தியாவில் ஊழல்’  என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாட்டில்  உள்ள 200 நகரங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதில் ஒவ்வொருவருக்கும் 8 கேள்விகள் கொடுக்கப்பட்டது. 

எத்தனை முறை அரசின் சேவைகளைப் பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, 25 சதவீதம் பேர் பல முறை  அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், 20 சதவீதம் பேர் ஒரு சில முறை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 84 சதவீதம் பேர், உள்ளாட்சி நிர்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அரசின் அத்தியாவசிய சேவைகளைப் பெற கடந்த ஆண்டு அரசு அதிகாரிகளுக்கு  10 பேரில் 5 பேர் லஞ்சம் கொடுத்துதான் பெற்றுள்ளனர்

பி.எப். நிதி, வருமானவரி, சேவை வரி, ரெயில்வே சேவை, மற்றும் ஒப்பந்தங்களைப் பெறுதல் ஆகிய பணிகளுக்காக லஞ்சம் கொடுத்துள்ளதாக 9 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  லஞ்சம் கொடுப்பதால் மட்டுமே அரசு துறைகளில் பணிகள் ஒழுங்காக நடக்கிறது என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருபகுதியினர் தெரிவித்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் பணிகள் தாமதமானாலும் லஞ்சம் கொடுப்பதில்லை எனத் தெரிவித்தனர்.

லஞ்சத்தையோ, ஊழலையோ  ஒழிக்க கடந்த ஒரு ஆண்டாக உள்ளாட்சி நிர்வாகமோ, மாநில அரசுகளோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அரசு சார்பில் ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், அது வலிமையானதாக இல்லை என 42 சதவீதம் பேர் தெரிவித்தனர். 

இதில் 8 பேர் போலீஸ், உள்ளாட்சிகள், உள்ளூர் நிர்வாகத்துக்கு, சொத்துக்கள் பதிவு, வாட் வரி தொடர்பாக லஞ்சம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"