காந்தி படம் பதித்த செருப்புகள் விற்பனை - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அமோசான் நிறுவனம்

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 10:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
காந்தி படம் பதித்த செருப்புகள் விற்பனை - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அமோசான் நிறுவனம்

சுருக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் தேசியக் கொடியை காலடி மேட்டில் வைத்து, இமேசான் நிறுவனம் இணையதளம் மூலம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதனை அதனை நிறுத்தியது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை செருப்பில் பதித்து, விற்பனைக்கு இணைதளம் மூலம் வெளியிட்டுள்ளது. இதை பார்த்த இந்திய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இணையதளம் மூலம் பல்வேறு பொருட்களை அமேசான் நிறுவனம் மூலம் பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட  காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் தற்பேது வெளியாகியுள்ளது. இதை பார்த்த இந்தியர்கள், கடும் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

இதனை கண்டித்து, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அமேசானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் மூலம் இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியேருக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை பற்றி, இந்திய அரசு இதுவரை எவ்வித  கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம் இந்திய தேசியக்கொடி பாதிக்கப்பட்ட காலடி மேட்டுகள் அமேசான் நிறுவனம் மூலம் கனடா பிரிவு இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!