இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏன் மகாத்மா காந்தியின் படம் உள்ளது?

By Manikanda Prabu  |  First Published Oct 1, 2023, 10:20 AM IST

இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றிருக்கும். அது ஏன் என்று தெரியுமா?
 


மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாள் நாள் கொண்டாடப்படவுள்ளது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர், 1947 இல் இந்தியா சுதந்திரத்திற்கு அகிம்சை வழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு ‘மகாத்மா’ என்று பட்டம் சூட்டினார்.

மகாத்மா காந்தியை பற்றி அறியாத பல விஷயங்கள் உள்ளன. அதன்படி, இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் ஏன் இடம்பெற்றிருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

undefined

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏன் மகாத்மா காந்தியின் படம் உள்ளது?


ஒரு நாட்டின் இறையாண்மையின் பிரதிநிதித்துவம்தான் அதன் நாணயங்கள். அவற்றில் அந்த நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த நபர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப் படுகிறார்கள். அந்த வகையில், நமது ரூபாய் நோட்டுகளின் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மகாத்மா காந்தியின் படத்தை 1996ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டன் மன்னரின் படம் இடம் பெற்றிருந்த நிலையில், அவரின் படம் மாற்றப்பட்டு சாரநாத் சிங்கமுகத் தூண்களின் படம் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 1996இல் அதனை மாற்றி மகாத்மா காந்தியின் படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

சிலிண்டர் விலை மீண்டும் ரூ.203 உயர்வு.! ஓட்டல்களில் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, 1969 ஆம் ஆண்டு, சேவாகிராம் ஆசிரமத்தின் முன் மகாத்மா காந்தி அமர்ந்திருப்பது போன்ற 100 ரூபாய்க்கான நினைவு நோட்டை வெளியிட்டது. அதன்பின்னர், 1987ஆம் ஆண்டு அக்டோபரில் புன்னகை செய்யும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை 500 ரூபாய் நோட்டுகளில் அறிமுகப்படுத்தப்படுதியது. அன்றிலிருந்து ரூபாய் நோட்டுகளில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் படம் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரூபாய் நோட்டுகளில் இருக்கும் காந்தியின் படம் வரையப்பட்டது அல்ல. 1946ஆம் ஆண்டு ஒரிஜினலாக எடுக்கப்பட்ட புகைப்படமே அதில் இடம்பெற்றுள்ளது. பிரிட்டிஷ் அரசியல்வாதி லார்ட் ஃபிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸுடன் இணைந்து படம் பிடிக்கப்பட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் காந்தி புன்னகைப்பது அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எனவே, அது பொருத்தமாக இருக்கும் என்பதால், அப்படத்தை கட் செய்து, மிரர் இமேஜ் என்று சொல்லப்படும் கண்ணாடி பிம்பமாக மாற்றி ரூபாய் நோட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் 'மகாத்மா காந்தி புதிய சீரிஸ்' ரூபாய் நோட்டுகளை அறிவித்தது. புதிய பாதுகாப்பு அம்சங்களுடன், நோட்டுகளின் பின்புறம் தற்போது காந்தி படத்துடன் ஸ்வச் பாரத் அபியான் லோகோவும் சேர்க்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியைப் பற்றிய சில சுவாரஸ்யமான அறியப்படாத உண்மைகள்


** அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை மகாத்மா காந்தி பரிந்துரைக்கப்பட்டார் ஆனால் விருதை பெறவில்லை.

** மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக, 2007ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

** முன்னாள் பிர்லா ஹவுஸ் தோட்டத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

** 1930ஆம் ஆண்டில் டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதராக மகாத்மா காந்தி இடம்பெற்றார்.

** இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் எதிர்த்து போராடிய நாடான கிரேட் பிரிட்டன், மகாத்மா காந்தி இறந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைக் கரவிக்கும் வகையில் தபால்தலையை வெளியிட்டது.

click me!