இந்தியா வரவேற்கிறது.. டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டில் ஒன்று கூடிய உலகத்தலைவர்கள்.. பிரதமர் மோடி உரை

By Raghupati R  |  First Published Sep 9, 2023, 11:02 AM IST

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 கூட்டத்தின் முதல் நாளான இன்றைய தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.


டெல்லியில் இரு நாட்கள் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியுள்ளது.

ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார்.

Latest Videos

undefined

இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அனைத்துத் தலைவர்களும் மாநாட்டுப் பகுதிக்கு வந்தடைந்தனர். கடைசியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றுச் சென்றார். காலம், முன்னேற்றம், தொடர்ச்சி ஆகியவைகளைக் குறிக்கும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோனார்க் சின்னத்தின் பிரதி முன்பாக நின்று பிரதமர் உலகத் தலைவர்களை வரவேற்றார்.

G20 பாரத் மாநாட்டில் பிரதமர் மோடி பேசி வருகிறார். https://t.co/vOmxPUMipn

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை ஆகும். ஜி 20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் உலகம் முழுவதும் நான் வருத்தமடைகிறேன்.

அங்குள்ள மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து உலக நாடுகளின் தலைவர்களையும் இந்தியா வரவேற்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், அசோக தூண் உள்ளது. அதில் மனிதகுலத்தின் நலன் மற்றும் நலன் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

click me!