ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி20அமைப்பின் 2022-23-ம் ஆண்டுக்கான தலைமைபொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக,பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!
ஜி20 மாநாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. 26, 27 தேதிகளில் நடைபெறும் கூட்டங்களில் நிலம் அழிந்துபோவது, சூழலியல் மீட்டெடுப்பு, பல்லுயிர் பரவல், நீராதாரங்கள் பாதுகாப்பு, நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Exciting start to the G20 4th ECSWG Meeting in Chennai, Tamil Nadu! The stage is set for fruitful discussions and meaningful progress towards a more sustainable and inclusive future. pic.twitter.com/TqhsmWd5N8
— MoEF&CC (@moefcc)28-ம் தேதி ஜி20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் 35 பேர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க காலநிலை தூதர் ஜான் கெர்ரி, சென்னையில் நடைபெறும் ஜி20 காலநிலை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
சீனாவுக்கு சென்ற பின்னர், காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி குறித்து விவாதிக்க அமெரிக்காவின் சிறப்பு ஜனாதிபதியின் தூதர் ஜான் கெர்ரி ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகிறார். ஜூலை 29 வரை அவர் தனது பயணத்தின் போது டெல்லி மற்றும் சென்னைக்கு வருகை தர உள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறை வரை - முழு விபரம் இதோ !!