சுகன்யான் திட்டத்தில் மனிதர்களுடன் விண்வெளிக்கு பறக்கும் பழ ஈக்கள்! ஏன் தெரியுமா?

Published : Feb 17, 2025, 11:08 AM IST
சுகன்யான் திட்டத்தில் மனிதர்களுடன் விண்வெளிக்கு பறக்கும் பழ ஈக்கள்! ஏன் தெரியுமா?

சுருக்கம்

இஸ்ரோவின் சுகன்யான் திட்டத்தில் மனிதர்களுடன் பழ ஈக்கள் விண்வெளிக்கு பறக்க உள்ளன. ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 

ககன்யான் திட்டம் 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளித்துறையில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் மிகப்பெரும் வரலாறு படைத்தது. தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், பல்வேறு விஷயங்களுக்காவும் செயற்கைகோளை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

சந்திரயான் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 'ககன்யான்' என்ற பெயர் கொண்ட இந்த திட்டத்தின்மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் பறக்க உள்ளனர். அதாவது 3 விண்வெளி வீரர்களை விசேஷமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, அவர்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதே  'ககன்யான்' திட்டமாகும். 

விண்வெளிக்கு பறக்கும் பழ ஈக்கள் 

இதற்காக விண்வெளி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் விண்கலத்துடன் இந்திய பழ ஈக்களையும் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதாவது விண்வெளி வீரர்களுடன் பழ ஈக்களும் விண்வெளிக்கு பறக்க உள்ளன. மொத்தம் 20 பழ ஈக்கள் விண்வெளிக்கு செல்ல உள்ளன.

பழ ஈக்கள் மரபணுக்கள் மனிதர்களுடன் 77 சதவீதம் பொருந்துகின்றன.இந்த ஈக்களின் ஈடுபாடு விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் ஆகும். அவை ககன்யானின் 5 முதல் 7 நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும். ஈக்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். நீண்ட கால விண்வெளிப் பயணங்களின் போது மனிதர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளலாம். இதில் எலும்பு சேதம், சிறுநீர் பிரச்சினைகள் மற்றும் நீரிழப்பு ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, சிறுநீரகக் கல் உருவாகும் அபாயம் அதிகம்.

பழ ஈக்கள் ஏன்?

இந்த பழ ஈக்களின் உதவியுடன், விண்வெளியில் சிறுநீரகக் கற்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்வார்கள். இதை ஆராய்வதன் மூலம், விஞ்ஞானிகள் உயிர்காக்கும் நடவடிக்கைகளைத் தயாரிக்க முடியும். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது? அவை என்ன வகையான உயிரியல் மாற்றங்களையும், அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.

ககன்யான் திட்டம் பூமிக்கு மேலே 400 கிமீ தொலைவில் உள்ள விண்வெளி சுற்றுப்பாதைக்கு மூன்று நாள் பயணத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவை அனுப்புவதன் மூலம் இஸ்ரோ புதிய சாதனை படைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!