pm modi: பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்கள் குஜராத் பயணம்: நாட்டின் முதல் சோலார் கிராமத்தை அறிவிக்கிறார்

By Pothy Raj  |  First Published Oct 8, 2022, 2:09 PM IST

பிரதமர் மோடி நாளை(9ம்தேதி) முதல் 11ம் தேதிவரை குஜராத் மாநிலத்துக்கு பயணம் செய்ய உள்ளார். அங்கு பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.


பிரதமர் மோடி நாளை(9ம்தேதி) முதல் 11ம் தேதிவரை குஜராத் மாநிலத்துக்கு பயணம் செய்ய உள்ளார். அங்கு பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

குறிப்பாக, மொதேரா கிராமத்தில் நாட்டிலேயே முதல் சோலார் கிராமத்தை பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார்.

Tap to resize

Latest Videos

திருப்பதியில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் 48 மணிநேரம் காத்திருப்பு: 4 கி.மீ. நீளத்துக்கு வரிசை

பிரதமர் மோடி நாளை முதல் 11ம் தேதிவரை குஜராத் மாநிலத்துக்கு பயண் செய்து பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார். மெஹ்சானா மாவட்டத்துக்கு நாளை மாலை 5.30 மணிக்குச் செல்லும் பிரதமர் மோடி, மோதிரா நகரில் ரூ.3,900 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.மோதிரா கிராமம் முழுவுதம் சோலார் கிராமம் என்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார்.  

அதன்பின் மாலை 6.45 மணி அளவில் மோதேஸ்வரி மாதா கோயிலிலும், அதன்பின் இரவு 7.30மணி அளவில் சூரியன் கோயிலிலும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார். 

இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் சபர்மதி-ஜகுடன், அகமதாபாத்-மெஹ்சனா இருப்புப்பாதை மாற்றத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். ஓன்ஜிசியின் நந்தாசன் திட்டம், மோதிரா சனாஸ்மா சாலை திட்டம், சர்தார் படேல் இன்ஸ்டிடியூட்டுக்கு புதியகட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்க உள்ளார். இது தவிர குடிநீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், பால்பவுடர் தொழிற்சாலை உள்ளிட்டவற்றுக்கு பிரதமர்மோடி அடிக்கல் நாட்டுகிறார்

ஹைதராபாத் கல்லறையில் பதுங்கியிருக்கும் 6 அடி மலைப்பாம்பு: மனதை பதறவவைக்கும் வைரல் வீடியோ

10ம் தேதி காலை பஹருச் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.15 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள மாணவர்களுக்கான கல்விக்கூடமான மோடி ஷைசானிக் சன்குல்லை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மாலை 5.30 அளவில் ஜாம்நகரில் பிரதமர் மோடி பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

பஹருச் நகரில் உள்ள அமோத்தில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்நாட்டுகிறார். ஜாம்புசர் நகரில் மருந்து உற்பத்தி, சேமிப்புக்கான கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரசாயனத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் தாஹேஜ்ஜில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார்.

அதன்பின் அகமதாபாத்தில் 11ம் தேதி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், பல திட்டங்களை நாட்டுக்கும் பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார். அகமதாபாத்தில் ரூ.1300 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் சிவில் மருத்துவமனைக்கு அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டுகிறார். ஜாம்நகரில் ரூ.1460 கோடி மதிப்பில் நீர்பாசன வசதி, மின்சாரம், குடிநீர், நகர்ப்புற கட்டுமானத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மக்கள்தான் முக்கியம்! எந்த நாட்டிலும் கச்சா எண்ணெய் வாங்குவோம்: ஹர்தீப் பூரி விளக்கம்

அதன்பின்அங்கிருந்து புறப்பட்டு உஜ்ஜைன் செல்லும் பிரதமர் மோடி மாலை 5.45  மணிஅளவில்  மகாகாளீஸ்வர் கோயிலில் தரிசனம் ,பூஜைகள் செய்ய உள்ளார். அதன்பின் இரவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார்.

click me!