tirupati:திருப்பதியில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் 48 மணிநேரம் காத்திருப்பு: 4 கி.மீ. நீளத்துக்கு வரிசை

By Pothy Raj  |  First Published Oct 8, 2022, 1:13 PM IST

திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் 48 மணிநேரம் காத்திருந்து வணங்கிச் சென்றனர். ஏறக்குறைய 4 கி.மீ தொலைவுக்கு பக்தர்கள் வரிசை நீண்டிருந்தது.


திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் 48 மணிநேரம் காத்திருந்து வணங்கிச் சென்றனர். ஏறக்குறைய 4 கி.மீ தொலைவுக்கு பக்தர்கள் வரிசை நீண்டிருந்தது.

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோச்சவ விழா கடந்த 5ம் தேதி சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் முடிந்தது. இதையடுத்து, கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரம்மோச்சவக் கொடியும் இறக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

ஹைதராபாத் கல்லறையில் பதுங்கியிருக்கும் 6 அடி மலைப்பாம்பு: மனதை பதறவவைக்கும் வைரல் வீடியோ

பிரம்மோச்சவத்தின் போது ஏறக்குறைய 57 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் புரட்டாசி மாதத்தின் 3வது சனிக்கிழமை மிகவும் விஷேசம் என்பதால், அன்று ஏழுமலையான தரிசிக்க வியாழக்கிழமை இரவிலிருந்து பக்தர்கல் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகிறார்கள். 

பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நீண்டவரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால், சாமி தரிசனத்துக்கு ஒவ்வொரு பக்தரும் 48 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யவேண்டியஅளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது. 

மக்கள்தான் முக்கியம்! எந்த நாட்டிலும் கச்சா எண்ணெய் வாங்குவோம்: ஹர்தீப் பூரி விளக்கம்

அதாவது வெள்ளிக்கிழமை மாலை ஒருவர் இலவச தரிசனத்துக்கு நின்றால் சனிக்கி்ழமை இரவுதான் சாமிதரிசனம் செய்யும் அளவுக்கு கூட்டம் இருப்பதால் மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்

திருப்பதியில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு வரிசைக்கு வெளியே 4 கி.மீ தொலைவு வரை பக்தர்கள் காத்திருக்கிறார்கள். நாராயணகிரி கார்டன் பகுதியில் உள்ள அரங்கில் ஏறக்குறைய 15 ஆயிரம் பக்தர்கள் காத்திருப்பதால் அரங்கு நிரம்பி வழிகிறது. 

சாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது திருப்பதி தேவஸ்தானத்துக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது.

ஸ்ரீவாரி தன்னார்வ சேவையாளர்களும் பக்தர்களுக்கு நீர்மோர், பால், தண்ணீர், உணவுப் பொட்டலங்கள்,  ஆகியவற்றை வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்காக தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். 
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், அடுத்துவரும் பக்தர்கள் கல்யாண வேதிகா மற்றும் பாபவினாசம் ஜங்ஷன் சாலையில் வரிசையில் நின்று கொள்ளலாம் என்று தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் மைல்கல் ‘பிரசாந்த் ஹெலிகாப்டர்’: மேக் இன் இந்தியாவின் அம்சம்

திருப்பதியில் இன்று அதிகாலை லேசாக மழை பெய்தபோதிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு சிரமம் ஏதும் இல்லை. திருப்பதியில் அதிகரித்துவரும் கூட்டம், மழை ஆகியவற்றைப் பார்த்து பக்தர்கள் திருப்பதிக்கு வரவும் என தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறுகையில் “ தொடர் விடுமுறை காலம் என்பதால் பக்தர்கள்கூட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, பக்தர்களுக்கு விரைவான தரிசனத்துக்கு வகை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்தால் அதை சரி செய்ய கட்டுப்பாட்டு அறையும் அமைக்ககப்பட்டுள்ளது. திருப்தியில் பக்தர்கள் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறையவாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்
 

click me!