From The India Gate: பட்ஜெட் உரையை கேட்க தமாதமாக வந்த விஐபிக்களும்; சசிதரூர் செய்த காரியமும்!!

By Asianet TamilFirst Published Feb 2, 2023, 8:23 AM IST
Highlights

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று சுவராஸ்யமான பட்ஜெட் அவையில் நடந்த விஷயங்களுடன் இதோ உங்களுக்கான 11வது எபிசோட்.

டேப்லெட் தான் எதிர்காலம் 

டிஜிட்டல் மயமாக்கல் உண்மையில் தொடங்கிவிட்டது. நிதியமைச்சர்கள் அச்சிடப்பட்ட பக்கங்கள் கொண்ட கோப்புகளை படித்த நாட்கள் போய்விட்டன. வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவின் சின்னமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டேப்லெட்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அதிலேயே பட்ஜெட்டை வாசித்தார். நிதியமைச்சர் தனது உரையை வாசிக்கும் போதும் அங்கிருந்த அனைத்து எம்.பி.க்களும் தங்கள் திரையில் கவனம் செலுத்தியதை காண முடிந்தது.

மற்றொரு பக்கம் டேப்லெட்டில் (ஐபேட்) முழுவதுமாக மூழ்கிய ராகுல் காந்தி, பட்ஜெட்டை முழுவதுமாக படிக்காமல் திரையை ஸ்க்ரோலிங் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது டேப்லெட்டை தொடாமலே இருந்ததும் கேலரியில் இருந்து தெரிந்தது.

சில தைரியசாலிகள்:

பார்வையாளர்களின் கேலரியில் சில துணிச்சலானவர்கள் அல்லது புத்திசாலிகளும் இருந்தனர். அவர்கள் அங்கு விதிகளை மீறினர். அவர்களது செல்போனில் தொடர்ந்து மெசேஜ் சத்தம் ஒலித்தபடி இருந்தன. மார்ஷல்கள் அதாவது அங்கிருந்த அதிகாரிகள் அந்த சத்தத்தை கேட்டிருந்தாலோ அல்லது அவர்களை பார்த்திருந்தாலோ அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஆச்சரியமாக இருந்தது. மறுபுறமோ ஒருவர் ஒருபடி மேலாக போனில் பேசிக் கொண்டிருப்பதைக் கூட பார்த்து வியப்பாக இருந்தது. எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கூட போனில் பேச துணிய மாட்டார்கள்.

நிரம்பியிய நாடாளுமன்ற பெஞ்சுகள்:

பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பே அங்கிருந்த பெஞ்சுகள் அனைத்தும் நிரம்பியிருந்தன, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளே நுழைந்தாலும், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பிற ஆளும் கட்சி மூத்த தலைவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அமர்வு தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக, அதாவது காலை 10.59 மணிக்கு தான், சோனியா காந்தி உள்ளே வந்தார். முன் வரிசையில் பரூக் அப்துல்லாவுக்கு அருகில் அமர்ந்தார்.

இதேபோல் மேலும் இருவர் மாறுபட்ட பாணியில் உள்ளே நுழைந்தனர். அதில் ஒருவர் சசி தரூர். அவர் ஒரு பிரபலமான எம்பி.  இருப்பினும், ஆச்சரியம் என்னவென்றால், சத்ருகன் சின்ஹா மிகவும் தாமதமாக அதாவது காலை 11.53 மணிக்கு தான் வந்தார். ஆனால் யாரும் எதும் கேட்கவில்லை. தன்னை யாராவது எதாவது சொல்வார்களா என்று சுற்றிலும் பார்த்தபடி நின்றார். யாரும் எதும் சொல்லாததால் இருக்கையில் அமர்ந்து விட்டு மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால் அவரை யாரும் கவனிக்கவில்லை.

சசி தரூர் செய்த காரியம்:

இருப்பினும், தரூர், ஒன்றை செய்தார். அவர் செய்தது ஆச்சரியமாக இருந்தது. அவர் சாப்பிட்ட ஏதோ பொருளின் கவரை எடுத்து, தனக்கு அருகில் இருக்கும் இருக்கையின் பாக்கெட்டில் (விமானத்தில் புத்தகங்கள் வைப்பதற்கு இருக்கும் இருக்கை பாக்கெட் போன்றது) சொருவிவிட்டார். அதாவது அந்த இருக்கை காலியாக இருந்தது. அவர் செய்ததை, அதாவது அவரது தலைக்கு மேலே பார்வையாளர் அவையில் அமர்ந்திருப்பவர்கள் பார்ப்பார்கள் என்ற எந்த கவனம் கூட இல்லை. 

மோடி-மோடி vs பாரத் ஜோடோ:

நிதியமைச்சரின் உரையின் போது அரசாங்கத்தின் அல்லது தேசத்தின் சில முக்கிய சாதனைகள் வெளிவரும் போதெல்லாம் அங்கிருந்தவர்கள் மோடி-மோடி என்ற கோஷத்தை எழுப்பினர். உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸை சேர்ந்தோர் பாரத் ஜோடோ யாத்திரையை குறிப்பிடும் வகையில் பாரத் ஜோடோ என்ற கோஷத்தை எழுப்பினர். எஞ்சிய எதிர்க்கட்சிகளும் அவர்களுடன் முழக்கம் எழுப்புவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் அவர்களுடன் இணையவில்லை. மாறாக அங்கிருந்த மற்றவர்கள் அவர்களை பார்த்து சிரிக்க மட்டுமே செய்தனர்.

click me!