ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று சுவராஸ்யமான பட்ஜெட் அவையில் நடந்த விஷயங்களுடன் இதோ உங்களுக்கான 13வது எபிசோட்.
அப்செட்டில் கட்சி தலைமை
சமாஜ்வாதி கட்சியின் முக்கியமான ஒருவரின் ட்விட்டர் எப்போதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராமணர்கள் மற்றும் பண்டிதர்கள் மீது அரசியல் விஷத்தைக் கக்கியதற்காக இந்தத் தலைவர் சிறைக்குச் சென்றார்.
கட்சி தலைமையோ இப்போது கவலையில் இருக்கிறது. ஏனென்றால், மீண்டும் இன்னொரு பூகம்பம் உருவாக்க வாய்ப்பு உள்ளது என்று தலைமையே கிறுகிறுத்து போய் இருக்கிறது.
ஒருவேளை இருக்குமோ
அரசியல் வட்டாரத்தில் மாஸ் காட்ட நினைத்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்த சம்பவம் அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. அகிலேஷ் சமீபத்தில் 'நான் சூத்ரா' என்ற தலைப்புடன் ஒரு போஸ்டரை வெளியிட்டார்.
போஸ்டர் பையனாக அகிலேஷ் இருக்கிறார் என்றும் கண்டன குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. அம்பேத்கரின் மேற்கோள் காட்டி பெஹன்ஜி இதை எதிர்த்தார். அதுமட்டுமின்றி பாஜகவின் உத்தியை பின்பற்றுகிறாரா ? என்றும் குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கிறது.
சிங்கப்பாதை
அவரது தந்தையின் கர்ஜனை இன்னும் பாரத்பூரை மட்டுமல்ல, முதல்வர் அலுவலகத்தையும் உலுக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் இந்த ராஜஸ்தான் அமைச்சரின் மகன் அவரை அரசியல் காட்டின் ராஜாவாகக் கருதவில்லை. அவர் வரும் தேர்தலில் பைலட் இருக்கையில் ஏறுவார் என்று நம்புகிறார்.
அவரது தந்தை கெலாட் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பது அவரை குஜ்ஜார் தலைவருடன் கைகோர்ப்பதைத் தடுக்கவில்லை. அவரது தந்தையின் வலிமைக்கு எதிராக மகனின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தடம் புரண்ட பயணம்
ராஜஸ்தானின் சக்திவாய்ந்த பெண் மேயரின் பெங்களூரு மற்றும் ஊட்டிக்கு சுற்றுப்பயணம் செய்து சண்டையிடும் கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் திட்டம் கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தது. இந்த காங்கிரஸ் மேயர், இரண்டு மந்திரிகளுடன் நெருக்கமாக இருப்பது என்பது தெரிந்த விஷயம் தான்.
100க்கும் மேற்பட்ட வார்டுகளைக் கொண்ட மாநகராட்சி பெரிய அமைப்பாகும். பல காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பாளர்களாக மாற இருப்பதால், அவர்களுக்காக பெங்களூரு மற்றும் ஊட்டி சுற்றுப்பயணத்தை திட்டமிட்டார். ஆனால் முதல்வர் அசோக் கெலாட் கடைசி நேரத்தில் தலையிட திட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க..From the India Gate: இவருக்கு முடி நரைத்தாலும் பதவி ஆசை விடலை; தேவ கவுடா குடும்பத்தில் போட்டா போட்டி!!
கன்னட மொழி பாசம்
உடனடி இணைப்பிற்காக பல்வேறு சர்க்கஸ் சாகசங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஊடகங்களை சந்தித்தார். அவர் தெரிவித்த வாழ்த்து பலரை ஆச்சரியப்படுத்தியது.
தமிழ்நாட்டைப் போலவே, கர்நாடகாவும், தேசிய மொழியாக இந்தியின் நன்மைகளைப் போதிக்கவும், ஊக்குவிக்கவும் தேசியத் தலைவர்களின் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பைக் கண்டது.
தற்போது அதிர்ஷ்டவசமாக, தேசிய தலைவர்கள் இப்போது டெல்லி தர்பாரில் கன்னடத்தின் மீது தங்கள் அன்பைக் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழ் வணக்கம் விரைவில் கேட்போமா என்பது டெல்லி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ரிசார்ட் சர்ச்சை
குதிரை பேரத்தை தடுக்கும் அரசியல் கட்சிகளின் முயற்சிகளுக்கு ரிசார்ட் டூரிசம் தான் முதல் வழியாக இருக்கிறது. ஆனால், கேரளா சிபிஎம்மில் இது புது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
சிபிஎம் கட்சியின் இளம் தலைவர் சிந்தா ஜெரோம் மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சுற்றுலா விடுதியில் தங்கியிருப்பது அம்பலமானது. சிந்தா இளம் மாநிலக் குழு உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் மாநில இளைஞர் ஆணையத்தின் தலைவர் ஆவார்.
சிந்தா ஒரு நண்பரின் ரிசார்ட்டில் இலவசமாக தங்கியிருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர் அதையெல்லாம் மறுத்து, மாத வாடகையாக ரூ.20,000 கொடுக்கப்பட்டதாகக் கூறினார். கடவுளின் சொந்த தேசத்தின் சுற்றுலாத் தலங்களில் உள்ள வீடுகளின் கட்டண விவரம் தெரிந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
கண்ணூரில் உள்ள ஈ.பி.ஜெயராஜனுக்கும் பி.ஜெயராஜனுக்கும் இடையே வார்த்தைப் போர் இன்னும் நீடிக்கிறது. நேற்று நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில், கண்ணூரில் உள்ள ஒரு சொகுசு ஆயுர்வேத ரிசார்ட்டில் ஈ.பி.க்கு பெரும் முதலீடுகள் இருப்பதாக பி.ஜெயராஜன் தனது குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இ.பி.யின் மகனும் மனைவியும் குழுவில் இயக்குநர்களாக உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஎம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக வதந்தி பரவிய போதிலும், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் அதை மறுத்து, இவை அனைத்தும் ஊடகத்தின் கட்டுக்கதை என்று கூறினார்.
இதையும் படிங்க..From the India Gate : அழகான முதல்வர் வேட்பாளர் முதல் ஆயுர்வேத ரிசார்ட் சர்ச்சை வரை - அரசியல் சலசலப்பு !!