From the India Gate: கேரளாவின் முதலாளித்துவ தோழரும் மினி கூப்பர் முதலாளியும்!

By SG BalanFirst Published Jun 4, 2023, 3:47 PM IST
Highlights

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 27வது எபிசோட்.

முதலாளித்துவ தோழர்:

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது மன்ஹாட்டன் நிகழ்வில் ஒரு லட்சம் டாலர் ஸ்பான்சர்ஷிப் தேடிக்கொண்டிருக்கிறாராம்.

இது கோல்டு ஸ்பான்சர்ஷிப் என்றால், 50,000 டாலரில் சில்வர் ஸ்பான்சர்ஷிப்பும் 25,000 டாலரில் புரோன்ஸ் ஸ்பான்சர்ஷிப்பும் வழங்கப்படுகின்றன.

விஜயன் உரையாற்றும் ஒரு பொது நிகழ்ச்சிக்கு நிதியுதவி அளிக்க இவ்வளவு பெரிய ஸ்பான்சர்களை தேடிப் பிடிக்கும் முயற்சியை கேரளாவில் உள்ள தோழர்கள் எப்படி சாக்குப்போக்கு நியாயப்படுத்துவார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம்.

இதுபோல நிதி திரட்டி விருந்து வைப்பது, நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது போன்றவை அமெரிக்க சமூகத்தில் வழக்கமாக நடக்கக்கூடியதுதான். இருந்தாலும், ஒவ்வொரு நிமிடமும் சோசியலிசம், பாட்டாளி வர்க்கம் என்று கொள்கைகள் மீது சத்தியம் செய்துகொண்டிருக்கும் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் இப்படிச் செய்கிறார் என்பது கவனிக்க வைக்கிறது. முதலமைச்சருடன் முக்கிய அமைச்சரவை சகாக்களும் அமெரிக்கா செல்கிறார்களாம். ஆனால், இன்னும் ஸ்பான்சர் பட்டியல் வெளிவரவில்லை.

நகைமுரணாக விஜயன் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு கியூபாவிற்கும் செல்வது செல்கிறாராம்! கியூபாவில் விஜயன் தனது குழுவுடன் சென்று பொது சுகாதாரத்துறை குறித்து ஆய்வு செய்வாராம். முதலாளித்துவம் சோசியலிசம் இரண்டு கலந்த காம்பினேஷன்!

35 பைசாவுக்கு ரயில்வே காப்பீடு எடுத்தால் ரூ.10 லட்சம்! விண்ணப்பித்துப் பெறுவது எப்படி?

மினி கூப்பர் முதலாளி:

அரசன் எந்த வழியில் போகிறாரோ அதே வழியில்தான் அந்நாட்டு மக்களும் செல்வார்கள் என்று சொல்வார்கள். அதைச் சரியாகப் புரிந்துகொண்டு விடாமுயற்சியுடன் பின்பற்றுபவர்தான் கேரளாவின் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர். 50 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் கார் டெலிவரி செய்யப்பட்டபோது எடுத்த புகைப்படம் சமீபத்தில் வைரல் ஆனது. கார் சாவியைப் பெற்றுக்கொண்டு போஸ் கொடுத்த அந்தப் படம் சிபிஎம் மற்றும் அதன் தொழிற்சங்கமான சிஐடியுவை சங்கடப்படுத்தும் வகையில் இருந்தது.

இதற்கு ஏழைகளின் தலைவரான அவர் ஒரு விளக்கம் சொன்னார். மினி கூப்பர் சொகுசு காரை தனது மனைவி வங்கியில் கடன் வாங்கி வாங்கியதாகக் கூறினார். ஆனால் அதற்கெல்லாம் சளைக்காத நெட்டிசன்கள் ரூ.50 லட்சம் கொடுத்து சொகுசு கார் வாங்கியதை வைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஏற்கெனவே அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார்களின் அணிவகுப்பில் இதுவும் சேர்ந்துவிட்டது. இது மட்டுமின்றி, தலைவர் சமீபத்தில் தனது சொத்தை விரிவுபடுத்த பக்கத்தில் ஒரு வீட்டுமனையை வாங்கியிருப்பதாவும் கூறப்படுகிறது.

இதைப் பற்றியெல்லாம் அவரிடம் கட்சியினர் விளக்கம் கேட்கவில்லை. ஒருவேளை கட்சிக்குள் இதுபோல நடப்பது முதல் முறை இல்லையே என்று விட்டுவிட்டார்களோ.

10 ஆண்டுகளில் ரயில்வே விபத்துகளால் 2.6 லட்சம் பேர் பலி; ரயில் மோதல் முக்கியக் காரணம் அல்ல!

ராணி தேனீ:

தெலுங்கானாவில் தனது இருப்பை பதிவு செய்ய ஒய்.எஸ். ஷர்மிளாவின் முயற்சிகள் மிகவும் தெளிவாகவும் சத்தமாகவும் கேட்கின்றன; சமீபத்தில் ஒரு போலீஸ்காரருக்கு அவர் பளார் என்று ஒரு அறை கொடுத்தாரே, அதுபோல.

ஷர்மிளா சமீபத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரைச் சந்திக்கச் சென்றது வதந்திகளை கிளப்புவதற்கு சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியின் மீது ஷர்மிளாவின் பார்வை இருப்பதாகப் பேசப்படுகிறது.

பிஎஸ்சி வினாத்தாள்கள் கசிந்ததை எதிர்த்து எஸ்ஐடி அலுவலகத்தில் தர்ணா நடத்துவது போன்ற அதிரடி முடிவுகளின் பின்னணியில் இந்த லட்சியம் இருப்பதாக பலர் கருதுகின்றனர். தெலுங்கானாவில் அவரை அதிகார மையமாக வளர்க்க விரும்பினாலும், அதற்கான நேரம் இன்னும் கனியவில்லை என காங்கிரஸ் தலைமை கருதுகிறது.

ஷர்மிளா தனது தந்தையும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பெற்றிருந்த செல்வாக்கையும் பயன்படுத்தி தெலுங்கானாவில் தனது கட்சியை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஷர்மிளா தனது கட்சியை காங்கிரஸுடன் இணைப்பாரா அதனால் அரசியல் களம் மாறுகிறதா என்று பார்க்கலாம்.

எலக்ட்ரானிக் இன்டர்லாக் தான் ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்: ரயில்வே அமைச்சர் விளக்கம்

அதிகார ஜோடி:

ராஜஸ்தானில் இரண்டு அரசு ஊழியர்களுக்கு இடையே காதல் திருமணம் நடந்தது. ஐபிஎஸ் அதிகாரியான மனைவி தனது கணவரான ஐஎஃப்எஸ் அதிகாரிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இவர்கள்தான் சிறந்த ஜோடி என்று பலரும் போற்றிப் புகழ்ந்த பலரும் இப்போது தோழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்கள். வெவ்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சக்திவாய்ந்த ஆளுமையான அந்தப் பெண் அதிகாரி பலரால் தபாங் அதிகாரி என்று அழைக்கப்படுபவர்! ஆனால் ஐ.எஃப்.எஸ். அதிகாரி அப்படி அல்ல. அவர் ஒரு மென்மையான மனிதர்.

கணவர் பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றாலும், மனைவி போதும் போதும் என்று தெளிவாக சொல்லிவிட்டார். இந்த விஷயம் இப்போது பகிரங்கமாகவிட்டது. ஆனால் இந்த ஜோடி பிரிந்து செல்ல முடிவு செய்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அமித் ஷா, ஜே.பி. நட்டாவுடன் சந்திரபாபு நாயடு சந்திப்பு; தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?

click me!