டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு.. இதுவரை என்ன நடந்தது? - முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு பார்வை!

By Ansgar R  |  First Published Sep 9, 2023, 7:14 PM IST

இந்திய தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தற்போது நடந்து வருகின்றது, இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், இதுவரை என்னென்ன முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறித்த ஒரு பார்வை.


ஆப்பிரிக்க யூனியன் தற்போது ஜி20 நாடுகளின் (இப்போது G21) புதிய நிரந்தர உறுப்பினராக உள்வாங்கப்பட்டுள்ளது, மாபெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ள நம்பிக்கையின்மையை ஒழிக்க, இந்த ஜி20 உறுப்பு நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, வளைகுடா, அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை இணைக்கும் விரிவான ரயில் மற்றும் கப்பல் இணைப்பு நெட்வொர்க் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் பலதரப்பு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சட்டத்தை நிலைநாட்டுமாறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பிரகடனத்தின் முக்கிய புள்ளிகள் இந்தியாவின் G20 ஷெர்பா அமிதாப் காந்த் அவர்களால் விவரிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

பன்முகத்தன்மை

மேலும் இந்த ஜி20 மாநாட்டில்,  வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்தும், SDGகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல் குறித்தும், நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம் குறித்தும், 21 ஆம் நூற்றாண்டிற்கான பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் பன்முகத்தன்மைக்கு புத்துயிர் அளித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலை ஜனவரி 22ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

எரிபொருள் பயன்பாடு 

தூய்மையான எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தாவர மற்றும் விலங்கு கழிவுகள் உட்பட பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட உயிரி எரிபொருளின் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை சந்திப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை இந்த கூட்டணி துரிதப்படுத்தும் என்றும் உறுதி எடுக்கப்பட்டது. 

மெகா ரயில் மற்றும் துறைமுகத் திட்டம் 

அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர், "கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்தை (திட்டம்) ஆராய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இது இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பாவிற்கு வர்த்தகம், எரிசக்தி செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடன் இணக்கமாக செல்வதற்கும், இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு ஊக்கமளிக்கிறது என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்பாக G20 தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர். இதனால், கரியமில வாயுவைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டுவதிலும் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் உள்கட்டமைப்பு பற்றாக்குறையை சமாளிக்க இந்த மாநாட்டில் பல விஷயங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டது. இந்த திட்டம் மத்திய கிழக்கில் பதட்டங்கள் மற்றும் உறுதியற்ற தன்மையை குறைப்பதில் பங்களிக்கும் என்றும் நம்பப்படுகிறது, இதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

குடிநீர் தேவைக்குத் தான் முன்னுரிமை: கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

click me!