கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டுவரை 7.22 மத்திய அரசுப் பணிக்கு 22.05 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டுவரை 7.22 மத்திய அரசுப் பணிக்கு 22.05 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் துறை இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
rahul: அரசரே! கேள்விக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
கடந்த 2014ம் ஆண்டு முதல் 202ம் ஆண்டு வரை மத்திய அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் புதிதாக 7 லட்சத்து 22 ஆயிரத்து 311 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த பதவிக்கு மொத்தம் 22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.
2021-22ம் ஆண்டில் 38ஆயிரத்து 850 பேர் நியமிக்கப்பட்டனர். 2020-21ம் ஆண்டில் 78,555 பேர், 2019-20ம் ஆண்டில் ஒரு லட்சத்து 47ஆயிரத்து 96 பேர், 2018-19ம் ஆண்டில் 19,76,147 பேர் நியமிக்கப்பட்டனர்.2016-17ம் ஆண்டில் 1,01,333 பேரும், 2014-15ம் ஆண்டில் 1,30,423 பேரும் நியமிக்கப்பட்டனர்.
custodial death: கடந்த ஓர் ஆண்டில் 2,544 கஸ்டோடியல் மரணங்கள்: உ.பி. முதலிடம், தமிழகத்தில் அதிகரிப்பு
ஒட்டுமொத்தமாக இந்தப்பணியிடங்களுக்கு 22 கோடியே 5 லட்சத்து 99ஆயிரத்து 238 விண்ணப்பங்கள் வந்தன.
2021-22ம் ஆண்டில் 1,86,71,121 விண்ணப்பங்களும், 2020-21ல் 1,80,01,469 கோடி விண்ணப்பங்களும், 2019-20ம் ஆண்டில் 1,78,39752 விண்ணப்பங்களும், 2018-19ல் 5,0936,479 விண்ணப்பங்களும் வந்தன. 2017-18ல், 3,94,76,878 விண்ணப்பங்களும், 2016-17ல் 2,28,99,612 விண்ணப்பங்களும், 2016-17ல் 2,95,51,844 விண்ணப்பங்களும், 2014-15ல் 2,32,22,083 விண்ணப்பங்களும் வந்தன.
அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்
2021-22ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்