ஆஹா ..வரும் பிப்ரவரியில் இருந்து பெருமாளை இலவசமாக தரிசிக்கலாம் !! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!!

Asianet News Tamil  
Published : Oct 04, 2017, 06:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
ஆஹா ..வரும் பிப்ரவரியில் இருந்து பெருமாளை இலவசமாக தரிசிக்கலாம் !! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!!

சுருக்கம்

from 2018 february free dharsan in thiruppathy

வரும் பிப்ரவரி மாதம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முழு நேர இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 23ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்குப் பின் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இலவச தரிசனத்திற்கு நேர ஒதுக்கீடு செய்ய கவுண்ட்டர்கள் அமைப்பது  குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.மேலும், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சோதனை முறையில் இலவச தரிசனத்திற்கு நேர ஒதுக்கப்படும் என்றும் அப்போது ஏற்படும் பிரச்னைகள் சரி செய்யப்பட்ட பிறகு, 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து பக்தர்களுக்கு  இலவச தரிசனத்திற்கு முழு நேர அனுமதி அளிக்கப்படும் என்றும் அனில்குமார் சிங்கால் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

மகாராஷ்டிரா துணைமுதல்வரின் விமானம் தீப்பற்றி விபத்து.. அஜித்பவாரின் நிலை..? தொண்டர்கள் கலக்கம்
குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!