பேச்சு, கருத்து சுதந்திரம் நியாயமான வரம்புகளை மீற முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் நியாயமான வரம்புகளை மீற அனுமதிக்க முடியாது; இல்லையென்றால் அது பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹிட்டாச்சி அஸ்டெமோ ஃபை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அந்நிறுவனத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் இரண்டு பதிவுகளை இட்டுள்ளார். இதனால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
undefined
ஹிட்டாச்சி நிறுவனத்துக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டதற்காக ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழககி விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அந்நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மிலிந்த் ஜாதவ், அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்து உத்தரவிட்டதுடன், பேச்சு, கருத்து சுதந்திரம் நியாயமான வரம்புகளை மீற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
வெறுப்பை தூண்டும் தெளிவான நோக்கத்துடன் நிறுவனத்திற்கு எதிராக பதிவுகள் இடப்பட்டுள்ளதாகவும், அவை ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாகவும் தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். “இதுபோன்ற செயல்களுக்கு எதிராக வலுவான செய்தியை அனுப்ப வேண்டும்.” என்றும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியது.
parliament attack நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவரால் பரபரப்பு; 4 பேர் கைது!
பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் நியாயமான வரம்புகளை மீற அனுமதிக்க முடியாது; இல்லையென்றால் அது பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் வழிவகுக்கும் என தனது உத்தரவில் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் விளைவுகள் ஏற்படும் வரை ஒருவர் காத்திருக்க முடியாது. இது போன்ற செயல்களை ஆரம்பத்திலேயே நசுக்க வேண்டும். இல்லையெனில், அது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு தவறான விஷயத்தை அனுப்பி விடும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளது. எந்தவொரு பணியாளரும் ஒழுக்கம் என்பது தனிச்சிறப்பு; பணியிடத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“இன்றைய தொழில்நுட்பத்தில் முன்னேறிய உலகில், ஒவ்வொரு நபரும் 24 மணி நேரமும் மொபைல் ஃபோனை எடுத்துச் செல்கிறார்கள். பேஸ்புக் கணக்கிற்கான அணுகல் மொபைல் போன் மூலம் மிகவும் எளிமையாக உள்ளது.” எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் அருகாமையிலும், நிறுவனத்தின் வளாகத்தினுள்ளும் தொழில் நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒரு தொழிலாளியின் நடத்தையை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.