BJP:இலவசம் என்பது வாக்களார்களை கவர்வதற்காகத்தான்: தேர்தல் ஆணையத்துக்கு பாஜக பதில்

By Pothy RajFirst Published Oct 27, 2022, 1:39 PM IST
Highlights

வாக்காளர்களைக் கவர்வதற்காகவே இலவசத் திட்டங்கள், நலத்திட்டங்கள் என்பது கொள்கைத் தலையீட்டோடு சேர்ந்தவை என்று தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடித்தில் பாஜக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வாக்காளர்களைக் கவர்வதற்காகவே இலவசத் திட்டங்கள், நலத்திட்டங்கள் என்பது கொள்கைத் தலையீட்டோடு சேர்ந்தவை என்று தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடித்தில் பாஜக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த செப்டம்பர் மாதம் உ.பி.யில் பண்டேல்கந்த் எக்ஸ்பிரஸ் சாலை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி “ இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்சிக்கு ஆபத்து. இதிலிருந்து அரசியல் கட்சிகள் வெளிவர வேண்டும்”எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாஜக, ஆம்ஆத்மி இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

ஆளுநரின் முடியைத் தொட்டால்கூட கேரள அரசைக் கலைக்யுங்கள்!சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கும் இலவசங்கள், தேர்தலுக்கு பின் வழங்கும் இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், வரையறை செய்ய  வேண்டும். விதிமுறைகளை மீறி நடக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை பறித்து, அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே பொதுநலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 

தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் முன் அரசியல் கட்சிகள் தங்களின் நிதிச்சூழலை அறிவிக்க வேண்டும் அதற்காக மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தில் திருத்தம் செய்யும் முன் அனைத்துக் கட்சிகளின் கருத்தையும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது, 19ம்தேதிக்குள் பதிலைத் தெரிவிக்க கேட்டுக்கொண்டிருந்தது. 

ரூ.100 கோடி பேரம்! டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற 3 பேர் போலீஸில் சிக்கினர்

இந்நிலையில் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் விவரங்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
 அதில் “ தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் என்பவை வாக்காளர்களைக் கவர்வதற்காக அறிவிக்கப்படுபவை. ஆனால், நலத்திட்டங்கள் என்பது அனைவரின் வளர்ச்சியை அடக்கிய கொள்கை முடிவோடு சேர்ந்தது. 

4 நாட்களுக்குப்பின்! தெலங்கானாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் தொடர்ந்தது

அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன் அதை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் இருப்பதை தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவருவதற்கு பாஜகவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது.

வாக்காளர்களுக்கு இலவசங்கள் அளித்து அவர்களைச் சார்ந்திருப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் திறனை வளர்த்து, தேசத்தின் மனிதவளத்தின் திறனை மேம்படுத்தும் தகுதியை வழங்கிட வேண்டும்.

மக்களுக்கு இலவச வீடு, ரேஷன் பொருட்கள்  வழங்குதல் ஒருவிதமான காரணங்களுக்காகவும், இலவச மின்சாரம் வழங்குவது வேறு காரணத்துக்காகவும் இருக்கிறது. வீடு என்பது அடிப்படைத் தேவை, ஒருமுறை மட்டுமே செய்யக்கூடிய உதவி. கொரோனா காலத்தில் மக்கள் வேலைவாய்ப்பு பறிபோனதால், இலவச ரேஷன்  பொருட்கள் வழங்கப்பட்டன. நலத்திட்ட நடவடிக்கைகளை, இலவச மின்சாரத்தோடு ஒப்பிட முடியாது” எனத் தெரிவித்தார்

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில், பஞ்சாபில் ஆட்சி அமைத்துள்ளது. குஜராத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்கு இலவச மின்சாரம்,உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. இந்த இலவச அறிவிப்புகள்தான் பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் வார்த்தை மோதலை ஏற்படுத்தியது.

click me!