Rahul Gandhi: 4 நாட்களுக்குப்பின்! தெலங்கானாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் தொடர்ந்தது

By Pothy RajFirst Published Oct 27, 2022, 11:21 AM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணம் கடந்த 4 நாட்கள் இடைவெளிக்குப்பின், தெலங்கானாவில் இன்று முதல் தொடங்கியது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணம் கடந்த 4 நாட்கள் இடைவெளிக்குப்பின், தெலங்கானாவில் இன்று முதல் தொடங்கியது.

தெலங்கானாவில் உள்ள நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள மக்தலில் இருந்து நடைபயணம் இன்று தொடங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு மாநில காங்கிஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, உத்தம் குமார் எம்.பி., விக்ரமார்கா உள்ளிட்டோர் ராகுல் காந்தியுடன் இணைந்தனர். 

பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன், உத்தவ் தாக்கரே, சரத் பவார் பங்கேற்பு

தெலங்கானாவில் 2வது நாளாக யாத்திரை இன்று தொடர்கிறது. கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் வழியாக, கடந்த 23ம் தேதி குடேபெல்லூரில் வழியாக தெலங்கானாவில் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரை இன்று 2வது நாளாக தொடர்கிறது. கடந்தஞாயிற்றுக்கிழமை முதல் 26ம் தேதிவரை சிறிய இடைவெளிவிட்டு இன்று மீண்டும் தொடர்ந்தது

கடந்த 23ம்தேதி டெல்லி சென்றிருந்த ராகுல் காந்தி, தெலங்கானாவுக்கு நேற்று இரவு திரும்பி, குடிபெல்லூருக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்தபின் இன்று நடைபயணம் மீண்டும் தொடர்ந்தது.

தெலங்கானாவில் ராகுல் காந்தியின் 2வது நாள் பயணம் 26 கி.மீ தொலைவை எட்டியுள்ளது. இன்றுஇரவு மக்தலில் உள்ள ஸ்ரீ பாலாஜி பேக்டரியில் ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் ஓய்வு எடுப்பார்கள்
தெலங்கானாவில் 16 நாட்கள் நடைபயணம் செல்லும் ராகுல் காந்தி, 18 சட்டப்பேரவைத் தொகுதி, 7 மக்களவைத் தொகுதிகள் வழியாகச் சென்று 375கி.மீ தொலைவைக் கடக்கிறார்.

வெயில் அதிகமா இருக்கு.. என்ன சன்ஸ்க்ரீன் யூஸ் பண்றீங்க ? யோசிக்காம பதில் சொன்ன ராகுல் காந்தி!

தெலங்கானாவை முடித்துவிட்டு, அங்கிருந்து மகாராஷ்டிராவுக்குள் ராகுல் காந்தி நவம்பர் 7ம் தேதி நுழைகிறார். இதற்கிடையே நவம்பர் 4ம் தேதி ஒருநாள் மட்டும் சிறிய இடைவெளி தரப்படுகிறது. 

தெலங்கானாவில் ராகுல் காந்தி நடைபயணத்தின்போது, பல்வேறு அறிவுஜீவிகள், பல்வேரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து பேச உள்ளார்.

இது தவிர மசூதிகள், கோயில்கள், தேவாலயங்களுக்கும் ராகுல் காந்தி சென்று வழிபாடு செய்ய உள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தை சிறப்பாகக் கொண்டு செல்ல மாநில காங்கிரஸ் கட்சி 10 சிறப்பு குழுக்களை உருவாக்கியுள்ளது.

ராகுல் காந்தியுடன் போட்டிபோட்டு தண்டால் பயிற்சி எடுத்த காங்கிரஸ் தலைவர்கள்: வைரல் வீடியோ

கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தைத் தொடங்கினார். காஷ்மீர் வரை செல்லும் இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 3,500கி.மீ தொலைவுக்கும் அதிகமாக நடக்க உள்ளார். 

தமிழகத்தைக் கடந்து, கேரள மாநிலத்தில் 18 நாட்களுக்கும் மேலாகச் சென்று தற்போது ராகுல் காந்தி நடைபயணம் கர்நாடக மாநிலத்துக்குள் சென்று கடந்த 23ம் தேதி கர்நாடகத்தை விட்டு ராகுல் காந்தி நடைபயணத்தில் வெளியேறினார். கர்நாடக மாநிலத்தில் மட்டும் 511 கி.மீ தொலைவு ராகுல்காந்தி நடந்துள்ளார்.

click me!