TRS MLAs: ரூ.100 கோடி பேரம்! டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற 3 பேர் போலீஸில் சிக்கினர்

By Pothy RajFirst Published Oct 27, 2022, 10:16 AM IST
Highlights

தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் 3 எம்எல்ஏக்களை ரூ.100 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் 3 எம்எல்ஏக்களை ரூ.100 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மொயினாபாத்தில் உள்ள ஒரு பண்ணைவீட்டில் இருந்த டெல்லியைச் சேர்ந்த ஸ்வாமிஜி உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.15 கோடி வீதம் முதல்கட்டமாகவும் மொத்தமாக ரூ.100 கோடி தருவதாகம் பேரம் பேசப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 பேரிடம் இருந்து ரூ.15 கோடி ரொக்கப்பணம், ஒருகாரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். காந்தாவரம் திலீப் குமார் என்ற பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.2000, ரூ.500 நோட்டுகள் ரூ.15கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன.

2028ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த ஜெட் மாதிரி ரெடி.. வெளியான சூப்பர் தகவல் !!

சைபராபாத் போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா கூறுகையில் “ தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்ஏக்களை 4 பேரை விலைக்கு வாங்க பேரம் பேசுவதாக புகார் வந்தது. இதையடுத்து, மொயினாபாத்தில் உள்ள ஒரு பண்ணைவீட்டில் சோதனையிட்டபோது, டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, திருப்பதியைச் சேர்ந்த சிம்ஹயுலு, தொழிலதிபர் நந்தகுமார் ஆகியோர் பேரம் பேசியது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும், டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்கி, ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

ரிஷி சுனக் மட்டும் கிடையாது மக்களே.! உலகை கலக்கும் 15 இந்தியர்கள் யார் யார் தெரியுமா ?

அதாவது குவாலா பல்ராஜ், பைலட் ரோஹித் ரெட்டி, பி ஹர்ஷவர்த்தன் ரெட்டி, ரெங்கா காந்தாராவ் ஆகியோருக்கு பண ஆசை காட்டி விலைக்கு வாங்க முயன்றனர். டிஆர்எஸ் கட்சிக்குள் பெரிய குழப்பத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கினால், அதிகமாக பணம் தருவதாகவும் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த பண்ணைவீடு நந்தகுமார் என்பவருக்குச் சொந்தமானது. இந்த பணம் எங்கிருந்து வந்தது, யாரெல்லாம் இதில் ஈடுபட்டுள்ளார்கள், பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் ” எனத் தெரிவித்தார்

தாந்தூர் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பண்ணைவீட்டில் ரெய்டு நடத்தி 3 பேரையும் பிடித்தனர். பேரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் 4 பேரும் முதல்வர் கேசிஆர்  இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

உக்ரைனில் இருந்து இந்திய மக்கள் வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!!

கடந்த 2019ம் ஆண்டிலிருந்தே தெலங்கானாவில் பாஜக ஆப்ரேஷன் லோட்டஸ் எனும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. தென் மாநிலத்தில் ஏற்கெனவே கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக தெலங்கானாவில் காலூன்ற பாஜக முயன்றது. ஆனால், பாஜகவுக்கு கடும் சவாலாக டிஆர்எஸ் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற விவகாரம் வெளியே தெரிந்ததையடுத்து, தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு டிஆர்எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயல்கிறது என்று கூறி ஹைதராபாத் அருகே உள்ள சவுதாபால் பகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜயவாடா நெடுஞ்சாலையில் அமைச்சர்கள் கங்குலா கமலாக்கர், இந்திரகரன் ரெட்டி ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் டிஆர்எஸ் தலைவர்கள் கோஷமிட்டனர். தெலங்கானாவில் டிஆர்எஸ் அரசை கவிழ்க்க பாஜக முயல்கிறது என்று கூறி அமைச்சர்கள் கோஷமிட்டனர். 

click me!