"இனி பெண்களுக்கு LKG முதல் Phd வரை இலவச கல்வி" - பஞ்சாப் முதல்வரின் தொடர் அதிரடி அறிவிப்புகள்!!

 
Published : Jun 20, 2017, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"இனி பெண்களுக்கு LKG முதல் Phd வரை இலவச கல்வி" - பஞ்சாப் முதல்வரின் தொடர் அதிரடி அறிவிப்புகள்!!

சுருக்கம்

free education for girls in punjab

பஞ்சாப் மாநிலத்தில் எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில  முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங்  தலையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

இதையடுத்து தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பல்வேறு அறிவிப்புகளை கேப்டன் அமரீந்தர் சிங் சட்டப் பேரவையில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில்  பஞ்சாப் விவசாயிகள் பெற்ற  2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

2 லட்சம் ரூபாய்க்கு  அதிகமாக கடன் பெற்ற நடுத்தர விவசாயிகளின் கடன் தொகையிலிருந்து 2 லட்சம்  ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்த அமரீந்தர் சிங், இதன் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என முதலமைச்சர் கேப்டன் எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

இதே போல் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு  33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக  உயர்த்தப்படும் என அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!