இந்த நான்கு கட்சிகள் சேர்ந்தால்... மோடி வீட்டுக்குப் போக வேண்டியதுதான்!

By Asianet TamilFirst Published Jan 25, 2019, 4:13 PM IST
Highlights

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி. பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே - கர்வே நிறுவனங்கள் இணைந்து நாடாளுமன்றத்தேர்தலில் மக்களின் மனநிலையை அறிய கருத்துக்கணிப்பு நடத்தின. பல்வேறு மாநிலங்களில் 13,179 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 

இந்தக் கருத்துக்கணிப்பில், நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தால்,  269 தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 219 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 55 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கட்டுள்ளது. 

காங்கிரஸ் கூட்டணி 44 சதவீத ஓட்டுகளையும், பாஜக கூட்டணி 35 வாக்குகளையும் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் இந்தக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் பாஜகவுக்கே சாதமாக இருக்கும் என்றும் கருத்துக்கணிப்பு உணர்த்துக்கிறது. 

click me!