நாட்டையே அலற விட்ட அரசியல் சாணக்கியர் அருண் ஜெட்லி... அரசு மரியாதையுடன் விடைபெற்றார்..!

By vinoth kumarFirst Published Aug 25, 2019, 3:56 PM IST
Highlights

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. 

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

  

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார்.  

இதனையடுத்து, அருண் ஜெட்லியின் உடல் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருண் ஜெட்லியின் உடல் இன்று காலை 10.00 மணியளவில் தீன்தயாள் உபாத்யாய் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

பின்னர், அருண் ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம் போத் காட் மாயானத்திற்கு
கொண்டுவரப்பட்டது. பின்னர், வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர், இறுதி அஞ்சலியை செலுத்தினர். இதனையடுத்து, அருண் ஜெட்லி உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு, அங்கு அவர்களது குடும்ப முறைப்படி அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!