கேரளா மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி (வயது 79) பெங்களூரில் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
கேரள முதல்வராக 2004-06 மற்றும் 2011-16 ஆகிய இரண்டு முறை உம்மன் சாண்டி பதவி வகித்தார். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உம்மன் சாண்டி வெற்றி பெற்றுள்ளார். 1970ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான் முதன்முதலாக புதுப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினராக சாண்டி தேர்வானார்.
1977இல் கே.கருணாகரன் அமைச்சரவையில் முதல்முறையாக அமைச்சரானார். அதன் இரண்டு முறை முதல்வராக பணியாற்றினார். அவர் மாநிலத்தில் நிதி இலாகாவை கவனித்தார், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். உம்மன் சாண்டிக்கு மரியம்மா என்ற மனைவியும், மரியா உம்மன், சாண்டி உம்மன், அச்சு உம்மன் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
Oommen Chandy: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார் - மறைவுக்கு காரணம் என்ன?
தனது 27 வயதில் 1970 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை தொடங்கினார். பின்னர் அவர் தொடர்ந்து 11 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டில், 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் புதுப்பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் மாநில சட்டமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றிய உறுப்பினரானார்.
கேரள காங்கிரஸ் (எம்) முன்னாள் தலைவர் மறைந்த கே.எம்.மணியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் உம்மன் சாண்டி. சாண்டி தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சரவைகளில் நான்கு முறை அமைச்சராகவும், நான்கு முறை மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மக்களின் முதல்வர் டூ சோலார் ஊழல் வரை.. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறுபக்கம்