மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாங்களாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சனாதன தர்மத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் இந்திய மக்கள் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கும் பேச்சால் மன வருத்தத்தில் உள்ளனர். எனவே அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப் பதிய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் உள்பட ஓய்வு பெற்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் அவர்களுக்கு எழுதி இருக்கும் கடித்ததில் மூத்த வழக்கறிஞர்கள் உள்பட ஓய்வு பெற்ற வழக்கறிஞர்கள் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் கீழ் அமைச்சராக பணியாற்றி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ''சில விஷயங்களை நாம் எதிர்க்க முடியாது. அவற்றை ஒழித்துத் தான் ஆக வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்றவற்றை நாம் ஒழிக்க வேண்டும். அதேபோல் தான் சனாதன தர்மமும் ஒழிக்கபட வேண்டும். இதை எதிர்க்க முடியாது என்று பேசியுள்ளார். மேலும், சந்தான தர்மம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. சனாதன தர்மம் பெண்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருந்தது என்றும் பேசி இருக்கிறார்.
இந்து திருமண சடங்குகளை விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்: வைரலாகும் பழைய வீடியோ!
ஷஹீன் அப்துல்லா வி. யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், [எழுத்து மனு(கள்) (சிவில்) எண். 940/2022)], வெவ்வேறு மதங்கள் இல்லாவிட்டால் சகோதரத்துவம் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இணக்கமாக இல்லாவிட்டால் ஒற்றுமையுடன் வாழ முடியாது என்று குறிப்பிட்டு, கவலை தெரிவித்து இருந்தது.
மேலும், இதுபோன்று வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டால், அரசும், போலீசாரும் தாங்களாகவே முன்வந்து புகார் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அல்லது தாமதம் செய்தால் இது நீதிமன்றத்துக்கு இழைக்கப்படும் அவமரியாதையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியின் தலைக்கு விலையை அதிகரித்த பரமஹம்ச ஆச்சார்யா!
இதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து இதுகுறித்து பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பதாகவும், மக்களின் கவலைகளை கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. உதயநிதி நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக பேசி இருக்கிறார். பாரத நாடு என்றும் மதச்சார்பற்ற நாடு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக தமிழ்நாடு அரசு அவர் பேசி இருப்பதை நியாயப்படுத்தி வருகிறது.
மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாங்களாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு மனு அனுப்பி உள்ளனர். |… pic.twitter.com/IfOVfPAeP3
— Asianetnews Tamil (@AsianetNewsTM)மேலும் அஸ்வினி குமாருக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையிலான வழக்கிலும், ''வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் கொடுக்கும் வரை எதிர்பார்க்காமல் தாங்களாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அவ்வாறு செய்யத் தவறினால், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே, தமிழ்நாடு அரசின் செயலற்ற தனமைக்காக, உச்சநீதிமன்றமே முன் வந்து வழக்கு பதிவு செய்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்'' என்று கடித்ததில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடிதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் தூதர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 262 முன்னாள் அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.