Abdul Nazeer: முத்தலாக், அயோத்தி தீ்ர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி அப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி

By Pothy Raj  |  First Published Feb 14, 2023, 3:19 PM IST

Abdul Nazeer: முத்தலாக் வழக்கு, அயோத்தி நில வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றிருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். அப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


Abdul Nazeer: முத்தலாக் வழக்கு, அயோத்தி நில வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றிருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். அப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச ஆளுநராக எஸ். அப்துல் நசீரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு பரிந்துரையின்பெயரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்தார்.

Tap to resize

Latest Videos

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.அப்துல் நசீர கடந்த ஜனவரி 4ம் தேதி ஒய்வு பெற்ற நிலையில் அவர் ஓய்வு பெற்ற 5 வாரங்களில் அவருக்கு ஆளுநர் பதவி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

ஏற்கெனவே அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவமும், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். நீதிமன்றத்தின் உச்சபட்ச பதவி வகித்தவர்கள், தங்களின் ஓய்வுக்குப்பின், அரசியலமைப்புப் பதவிக்கு வருவது அதிகரித்துள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் பூஷன், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஓய்வு பெற்ற 4 மாதங்களில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

உன்னதத் தியாகத்தை ஒருபோதும் மறக்கமுடியாது - பிரதமர் மோடி உருக்கம்

கடந்த 1958ம் ஆண்டு, ஜனவரி 5ம் தேதி பிறந்த எஸ். அப்துல் நசீர் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2003ல் நியமிக்கப்பட்டார். 2017ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அப்துல் நசீர் பதவி உயர்த்தப்பட்டு, பின்னர் கொலிஜியத்திலும் அப்துல் நசீர் நியமிக்கப்பட்டார்.

அப்துல் நசீர் தான் வழங்கிய பல்வேறு தீ்ர்ப்புகளில் தனது முன்னோடி நீதிபதிகளின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் 10 மாதங்கள் நீதிபதியாக பணியாற்றிய அப்துல் நசீர், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அமர்வுகளில் இடம் பெற்றுள்ளார்.

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் அப்துல் நசீர் இடம்பெற்றிருந்தார். இந்த வழக்கில் 4:1 என்ற கணக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது 4 நீதிபதிகள் அயோத்தி நிலம் கோயிலுக்கு சொந்தமானது எனத் தீர்ப்பளி்த்த குழுவில் அப்துல் நசீர் இருந்தார். இந்த அமர்வைவிட 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்க நசீர் மறுத்துவிட்டார்.

15 நாட்கள் பழங்குடியினர் திருவிழா! பிரதமர் மோடி வரும் 16ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்

முத்தலாக் தடைச் சட்டம் தொடர்பான வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் முத்தலாக் தடைச் சட்டம் செல்லும் என்று அப்துல் நசீர் தீர்ப்பளித்தார். 

அது மட்டுமல்லாமல் 2017ம் ஆண்டு தனிநபர் அந்தரங்க உரிமை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிலும் அப்துல் நசீர் இருந்தார். அப்துல் நசீர் ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கிலும் தீர்ப்பு அளித்தார். அந்த வழக்கில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் குழுவிலும் அப்துல் நசீர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!