கொலை வழக்கு.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்சி போலீசில் சரண்.. அதிர்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன்.!

By vinoth kumarFirst Published May 24, 2022, 10:58 AM IST
Highlights

கடந்த வியாழக்கிழமை எம்எல்சி உதயபாஸ்கர் வந்து ஓட்டுநர் சுப்ரமணியத்தை தனது காரில் அழைத்து சென்றார். ஆனால், அன்றிரவு 1.30 மணிக்கு சாலை விபத்தில் சுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி, காரில் அவரது சடலத்தை எடுத்து வந்து எம்எல்சி உதயபாஸ்கர் சுப்ரமணியத்தின் குடும்பத்தாரிடம் தெரிவித்தார். 

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினரான உதயபாஸ்கர் போலீசில் சரணடைந்தார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா கொண்டைய்யபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (23). இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினரான உதயபாஸ்கரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் கார் ஓட்டுநர் பணியிலிருந்து விலகி வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை எம்எல்சி உதயபாஸ்கர் வந்து ஓட்டுநர் சுப்ரமணியத்தை தனது காரில் அழைத்து சென்றார். ஆனால், அன்றிரவு 1.30 மணிக்கு சாலை விபத்தில் சுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி, காரில் அவரது சடலத்தை எடுத்து வந்து எம்எல்சி உதயபாஸ்கர் சுப்ரமணியத்தின் குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, தனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சுப்ரமணியத்தின் மனைவி அபர்ணா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கை மர்மச்சாவு என போலீசார் பதிவு செய்தனர். சுப்ரமணியத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அப்படி ஒரு விபத்தும் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. இதனிடையே சுப்ரமணியத்தை எம்எல்சிதான் கொலை செய்தார் என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டு என எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், திடீரென தலைமறைவாக இருந்து வந்த உதயபாஸ்கர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு நேற்று சரணடைந்தார். 

click me!